தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் கொடூரக் கொலைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளன. திருச்சி சமயபுரத்தில் டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில், பட்டப்பகலில் பிரகாஷ் என்ற இளைஞர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டது சட்ட ஒழுங்கின் சீர்கேட்டை வெளிப்படுத்துகிறது. இதுமட்டுமன்றி, திருப்பூரில் பெண், நெல்லையில் ஊராட்சிமன்ற தலைவர், மதுரையில் பள்ளி மாணவர், சென்னையில் தவெக பிரமுகர், நடிகர் பிரதீப் எனப் பல தரப்பினரும் தொடர்ச்சியாகக் கொல்லப்பட்டு வருவது மாநிலத்தின் பாதுகாப்புச் சூழல் குறித்த தீவிரக் கேள்விகளை எழுப்பியுள்ளது.
அண்மையில் கோவையில் மட்டுமே 11 கொலைகள் நிகழ்ந்திருப்பது குற்றச் சம்பவங்களின் வீரியத்தையும், குற்றவாளிகளுக்குச் சட்டத்தின் மீதுள்ள பயமின்மையையும் தீவிரமாகக் காட்டுகிறது. இதுபோன்ற பகிரங்கப் படுகொலைகள் தொடர்ந்து அதிகரிப்பது மக்களின் அன்றாட வாழ்வியலைப் பாதிப்பதோடு, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறது. குற்றத் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது தற்போதைய கட்டாயமாகும்.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தின் பஞ்சகுட்டா பகுதியில், அரசுப் பேருந்து மோதி ஹேமதுர்கா என்ற 26 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில்…
டெல்லியைச் சேர்ந்த மோகன் குமார் - காஜல் தம்பதியினர், தங்கள் 9 மாத ஆண் குழந்தையுடன் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலில்…
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பம்பாசி-சின்ச்வாட் பகுதியில் போக்குவரத்து போலிஸார் நடத்திய தீவிர வாகனச் சோதனையின் போது, போலி 'எம்.எல்.ஏ' ஸ்டிக்கர்களை…
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, ஹைதராபாத்தின் பேகம்பஜார் ஃபீல்ட் கானாவில் நிறுவப்பட்டுள்ள 48 கிலோ எடை கொண்ட தங்க விநாயகர் சிலை…
துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை 2026 இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாம்பியன்…
டெல்லியில் தொழிலாளியாகப் பணிபுரியும் ஒருவரின் மனைவி, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் காதலில் விழுந்துள்ளார். கணவர் இல்லாத நேரத்தில்…