“திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய காதலன்..!” பகீர் ட்விஸ்ட் கொடுத்த இளம் பெண்..! இறுதியில் நடந்த பயங்கர சம்பவம்….!

Spread the love

கிருமாம்பாக்கத்தை சேர்ந்த இளம் பெண் (22) ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக, இந்த இளம் பெண்ணுக்கும் மணிகண்டன் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என பேசி வைத்திருந்த நிலையில், மணிகண்டன் வேலை காரணமாக சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அவ்வப்போது தொலைபேசியில் பேசி வந்த போது, “திருமண செய்ய வேண்டுமென்றால், உங்கள் வீட்டில் எவ்வளவு நகை போடுவார்கள்?” என்று மணிகண்டன் அப்பெண்ணிடம் கேட்டுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மணிகண்டனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் முடிந்தது. பின் கடந்த திங்கட்கிழமை திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல் நிலையத்தில் மணிகண்டன் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, தன்னை மணிகண்டன் ஏமாற்றி விட்டதாகவும், அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இளம் பெண்ணின் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்ய நேற்று இரவு அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால் விஷயம் கேள்விப்பட்ட மணிகண்டன், தலைமறைவாகிவிட்டார். எனவே இன்று நடைபெற இருந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.

Srimathi

Recent Posts

ஒரு மனுஷன் எது பண்ணாலும் தப்பா?… “வண்டி ஓட்டிய முதல்வர் விஜய்”….வச்சு செய்த ப்ளூ சட்டை மாறன்…. இணையத்தில் வெடித்த புதிய சர்ச்சை….!

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தற்சமயம் ஆட்சிப் பொறுப்புகளை தீவிரமாக கவனித்து வருகிறார். தினசரி புதிய திட்டங்கள், திடீர்…

4 minutes ago

“இன்னும் என் ஆட்டமே ஆரம்பிக்கல”… சட்டசபையில் வெடிக்கப்போகும் அடுத்த குண்டு… முதல்வர் விஜய் தலையில் இடியை இறக்கிய பிரேமலதா…!

கடலூர் மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான விருத்தாசலத்தை மையப்படுத்தி புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று தேமுதிக பொதுச்செயலாளரும், விருத்தாசலம் தொகுதி…

13 minutes ago

அரசியலுக்கு வந்தது ஏன்..? இதற்காக தான்… உண்மையை உடைத்த லீமா ரோஸ்..!!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோஸ் சார்லஸ், சட்டமன்ற உறுப்பினராக (எம்எல்ஏ) அதிகாரப்பூர்வமாகப்…

1 மணத்தியாலம் ago

மும்பை மர்ம மரணம்.. தர்பூசணியில் தூவிய உப்புதான் உயிரைப் பறித்ததா..? வெளியான அதிர்ச்சித் தகவல்…!

மும்பையின் பய்துனி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கு, தற்போது தீவிர விசாரணைக்…

1 மணத்தியாலம் ago

விலை ₹50 லட்சம்.. ஒரு நாளைக்கு 23 லிட்டர் பால்.. உத்தரபிரதேசத்தை மிரள வைத்த ‘கார்கி’ எருமை…!!

உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தின் முகமதுபூர் கிராமத்தைச் சேர்ந்த 'கார்கி' என்ற முர்ரா இன எருமை மாடு, அதிக பால்…

1 மணத்தியாலம் ago

அவர் என்ன கடவுளா..? தவெக விஜய் படம் காட்டிய எம்.எல்.ஏ-வை சட்டசபையில் வறுத்தெடுத்த புதுச்சேரி சபாநாயகர்…!!

புதுச்சேரி சட்டசபைக் கூட்டத்தொடரின் போது, தவெக கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் (MLA) ஒருவர், தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நடிகர்…

1 மணத்தியாலம் ago