விலை ₹50 லட்சம்.. ஒரு நாளைக்கு 23 லிட்டர் பால்.. உத்தரபிரதேசத்தை மிரள வைத்த ‘கார்கி’ எருமை…!!

Spread the love

உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தின் முகமதுபூர் கிராமத்தைச் சேர்ந்த ‘கார்கி’ என்ற முர்ரா இன எருமை மாடு, அதிக பால் உற்பத்தி செய்து ஒட்டுமொத்த மாநிலத்திலும் புதிய சாதனையைப் படைத்துள்ளது. லக்னோவிலிருந்து வந்த நிபுணர் குழுவின் நேரடி கண்காணிப்பில் நடத்தப்பட்ட பால் உற்பத்தித் திறனுக்கான சோதனையில், இந்த எருமை மாடு ஒரு நாளைக்கு 23.375 லிட்டர் பால் கொடுத்து உத்தரபிரதேச மாநிலத்திலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த அசாத்திய சாதனைக்காக உத்திரபிரதேச வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு சங்கத்தினர் இதன் உரிமையாளரான சௌத்ரி விக்ரம் சிங்கின் குடும்பத்தினருக்குக் கோப்பை வழங்கிப் பாராட்டியுள்ளனர்.

சுமார் 4 வயதுடைய இந்த கார்கி எருமை மாடு, 5.5 அடி உயரத்துடன் பார்ப்பதற்கு மிகவும் கம்பீரமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. இந்த மாட்டின் உரிமையாளர் சேகர் சவுகான் மற்றும் அவரது தந்தை விக்ரம் சிங் ஆகியோர் கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து மேற்கொண்ட கடின உழைப்பாலும், முறையான இனப்பெருக்க (Breeding) முயற்சியினாலும் தான் இந்த வெற்றியை எட்ட முடிந்துள்ளது. ஹரியானாவின் புகழ்பெற்ற ‘பீம்’ என்ற முர்ரா இன எருமையின் மூலம் இந்த கார்கி எருமை மாட்டின் இனம் மேம்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளது.

தற்போது கார்கி எருமை மாடு மாதத்திற்குச் சுமார் 50,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டித் தருகிறது. இதன் அபாரமான பால் உற்பத்தித் திறன் மற்றும் பிரம்மாண்ட தோற்றத்தைக் கண்டு வியந்த பல வியாபாரிகள் இந்த எருமை மாட்டை 20 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரை விலை கொடுத்து வாங்க முன்வந்துள்ளனர். இருப்பினும், கார்கி தங்களின் குடும்பத்தில் ஒரு அங்கமாகவும், தங்களது அடையாளமாகவும் மாறிவிட்டதால், இதனை எவ்வளவு பணம் கொடுத்தாலும் விற்கப்போவதில்லை என்று அதன் உரிமையாளர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.

Soundarya

Recent Posts

அரசியலுக்கு வந்தது ஏன்..? இதற்காக தான்… உண்மையை உடைத்த லீமா ரோஸ்..!!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோஸ் சார்லஸ், சட்டமன்ற உறுப்பினராக (எம்எல்ஏ) அதிகாரப்பூர்வமாகப்…

32 minutes ago

மும்பை மர்ம மரணம்.. தர்பூசணியில் தூவிய உப்புதான் உயிரைப் பறித்ததா..? வெளியான அதிர்ச்சித் தகவல்…!

மும்பையின் பய்துனி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கு, தற்போது தீவிர விசாரணைக்…

45 minutes ago

அவர் என்ன கடவுளா..? தவெக விஜய் படம் காட்டிய எம்.எல்.ஏ-வை சட்டசபையில் வறுத்தெடுத்த புதுச்சேரி சபாநாயகர்…!!

புதுச்சேரி சட்டசபைக் கூட்டத்தொடரின் போது, தவெக கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் (MLA) ஒருவர், தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நடிகர்…

57 minutes ago

“இதயம் பலவீனமானவர்கள் பார்க்காதீங்க..!” மரண பயத்தை காட்டும் உலகின் மிக ஆபத்தான பாதை.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் அமைந்துள்ள 'தகாஸ் வேலி' என்ற இடத்தில் இருக்கும் ஒரு ஆபத்தான நடைபாதை சமூக ஊடகங்களில் வைரலாகி…

59 minutes ago

தவெக அமைச்சரவையில் இடம்பெறும் வன்னி அரசு..? அழைப்பு விடுத்த விஜய்…

தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் செய்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள்…

1 மணத்தியாலம் ago

Breaking: டாஸ்மாக் விலை… முதல்வர் விஜய் அதிரடி..!!

டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ₹10 முதல் ₹30 வரை வசூலிக்கப்படுவதாக மது பிரியர்கள்…

1 மணத்தியாலம் ago