புதுச்சேரி சட்டசபைக் கூட்டத்தொடரின் போது, தவெக கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் (MLA) ஒருவர், தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நடிகர் விஜய்யின் புகைப்படத்தை அவையில் திடீரென உயர்த்திக் காண்பித்தார். இந்தச் செயல் அவையில் இருந்த மற்ற உறுப்பினர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதுடன், சபையின் விவாதங்களுக்கும் வழிவகுத்தது.
இதனைக் கண்டு அதிருப்தியடைந்த புதுச்சேரி சட்டசபை சபாநாயகர் , அந்த எம்.எல்.ஏ-வின் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார். “அவர் என்ன கடவுளா? எதற்காகச் சட்டமன்றத்திற்குள் அவருடைய புகைப்படத்தைக் காட்டுகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பிய சபாநாயகர், அவையின் மாண்பைக் குலைக்கும் வகையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என அவரை எச்சரித்து அமர வைத்தார்.
சட்டமன்ற விதமுறைகளின்படி அவைக்குள் தேவையின்றிப் புகைப்படங்களையோ அல்லது பதாகைகளையோ காட்டுவது விதிமீறலாகும் என்பதைச் சுட்டிக்காட்டிய சபாநாயகர், இனிவரும் காலங்களில் மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை விவாதிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றும் தவெக சட்டமன்ற உறுப்பினருக்கு அறிவுறுத்தினார்.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோஸ் சார்லஸ், சட்டமன்ற உறுப்பினராக (எம்எல்ஏ) அதிகாரப்பூர்வமாகப்…
மும்பையின் பய்துனி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கு, தற்போது தீவிர விசாரணைக்…
உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தின் முகமதுபூர் கிராமத்தைச் சேர்ந்த 'கார்கி' என்ற முர்ரா இன எருமை மாடு, அதிக பால்…
பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் அமைந்துள்ள 'தகாஸ் வேலி' என்ற இடத்தில் இருக்கும் ஒரு ஆபத்தான நடைபாதை சமூக ஊடகங்களில் வைரலாகி…
தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் செய்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள்…
டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ₹10 முதல் ₹30 வரை வசூலிக்கப்படுவதாக மது பிரியர்கள்…