“இன்னும் என் ஆட்டமே ஆரம்பிக்கல”… சட்டசபையில் வெடிக்கப்போகும் அடுத்த குண்டு… முதல்வர் விஜய் தலையில் இடியை இறக்கிய பிரேமலதா…!

Spread the love

கடலூர் மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான விருத்தாசலத்தை மையப்படுத்தி புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று தேமுதிக பொதுச்செயலாளரும், விருத்தாசலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் தொகுதி மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக (தவெக) வேட்பாளர் விஜயை விட 2,387 வாக்குகள் கூடுதலாகப் பெற்று, மொத்தம் 69,351 வாக்குகளுடன் த்ரில் வெற்றி பெற்றார்.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு, தனக்கு வாக்களித்த தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிப்பதற்காக பிரேமலதா விஜயகாந்த் 3 நாட்கள் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். இதன் தொடக்கமாக, இன்று காலை விருத்தாசலத்தில் உள்ள புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், தொகுதி மக்களின் நலனுக்காக சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது எதிர்காலத் திட்டங்கள் மற்றும் தொகுதி மேம்பாடு குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “தேர்தல் களத்தில் இந்த தொகுதி மக்களுக்காக நான் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் சட்டசபையில் பேசி, தற்போது ஆட்சியில் இருக்கும் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்து நிச்சயம் நிறைவேற்றுவேன். அதுமட்டுமின்றி, அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்களை நேரில் சந்தித்து விருத்தாசலம் தொகுதிக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் கேட்டுப் பெறுவேன். சட்டமன்றத்தில் எனது கன்னிப் பேச்சு இன்னும் தொடங்கவில்லை, வெறும் அறிமுகம் மட்டுமே முடிந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.

மேலும், தனது முதன்மையான இலக்கு குறித்துப் பேசிய அவர், “சட்டமன்றத்தில் தொகுதிக்கான பேச்சு மற்றும் இலாகாக்களுக்கான விவாதம் வரும்போது விருதாசலம் தொகுதிக்காக நான் தீவிரமாகப் பேசுவேன். விருத்தாசலத்தை தனி மாவட்டமாக மாற்றுவதுதான் என்னுடைய முதல் கோரிக்கையாக இருக்கும். இதனை தேர்தல் வாக்குறுதியாகவும் தொகுதி மக்களுக்கு நான் சொல்லியிருக்கிறேன். எனவே, இதனை சட்டசபையில் உரக்கப் பேசி முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று, விருத்தாசலத்தை மாவட்டமாக மாற்ற எல்லா விதத்திலும் தீவிர முயற்சி எடுப்பேன்” என உறுதியளித்தார்.

Nanthini

Recent Posts

“ஐயோ என்னை விட்ருங்க ப்ளீஸ்”… கதறிய 8 வயது சிறுமி… கிராமத்தோடு சேர்ந்து தேடிய… மிருகம் மாட்டிக்கொண்டது எப்படி?… மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…

7 மணத்தியாலங்கள் ago

அம்மாடியோ… நிலநடுக்கத்தின் அறிகுறியா?… திடீரென கொந்தளிக்கும் கிணற்று நீர்… குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்ம சம்பவம்…!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…

7 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… தாய் கதறல்… கூலித் தொழிலாளி பேருந்து மோதி பலி… பாட்னாவில் வன்முறை வெடிப்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்…!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…

8 மணத்தியாலங்கள் ago

“ஆளே இல்லன்னா என்னடா… நாங்க இறங்குனா ஆட்டமே… வேற மாதிரி இருக்கும்”… மைதானத்தை கலக்கிய மாஸ் கேட்ச்… இணையத்தில் வைரல் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…

8 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… முகத்தில் மேக்கப்… பெண் வேடத்தில் 3 குழந்தைகளின்… தந்தை தூக்கில் தொங்கிய கொடூரம்… பகீர் பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…

8 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

8 மணத்தியாலங்கள் ago