சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ, மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது. கிருத்தார்த்தா என்ற இளைஞர், தனது வீட்டில் பணிபுரியும் ஜோதி என்ற பெண் சமையலறையில் அழுது கொண்டிருப்பதைக் கண்டார்.
மேலும் அதற்கான காரணத்தை வினவியபோது, அன்று தனது பிறந்தநாள் என்றும், தனது தாய் உயிருடன் இருந்திருந்தால் இந்நேரம் தன்னை அரவணைத்துக் கொண்டாடியிருப்பார் என்றும் ஜோதி கண்ணீருடன் கூறினார். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த ஜோதியின் தனிமையையும் வேதனையையும் உணர்ந்த கிருத்தார்த்தா, அவருக்கு ஒரு இனிய ஆச்சரியத்தை அளிக்க முடிவு செய்தார்.
A post shared by Kritartha (@tamashewala)
“>
இதனால் தனது நண்பர்களுடன் இணைந்து ஒரு அழகான கேக் வரவழைத்து, ஜோதியின் பிறந்தநாளை கிருத்தார்த்தா உற்சாகமாகக் கொண்டாடினார். எதிர்பாராத இந்த அன்பைக் கண்டு நெகிழ்ந்து போன ஜோதி, தனது கையில் இருந்த 500 ரூபாயைக் கொடுத்து அனைவருக்கும் விருந்து வாங்கித் தருமாறு வற்புறுத்தியது பார்ப்பவர்களை மேலும் கண்கலங்கச் செய்தது.
இந்நிலையில் ஏழ்மையிலும் அவரிடம் இருந்த அந்தப் பெருந்தன்மையும், அந்த இளைஞரின் மனிதாபிமானமும் சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. “உண்மையான மகிழ்ச்சி பிறரை மகிழ்விப்பதில் தான் இருக்கிறது” என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஐ.டி. பார்க் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வீட்டில் இந்த நூதன…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், அவரது நிச்சயிக்கப்பட்ட மணமகள் சியா கோயலின் ‘ஸ்னாப்சாட்’ குறுஞ்செய்தி இணையத்தில் வெளியாகி…
இயற்கை சீற்றங்களின் போது மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகளும் தங்களின் உயிர் பிழைப்புக்காகப் போராடும் காட்சிகள் நெஞ்சை நெகிழ வைப்பவை. சமீபத்தில்…
அவதூறு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழக அரசால்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்திருப்பது பார்க்கப்படுகிறது. அவர் மீதான பல்வேறு…
வெறும் படிப்பால் மட்டும் வாழ்க்கையில் சாதித்து விட முடியாது என்பதற்கு நம் நாட்டில் வாழ்ந்த, வாழ்கின்ற பல படிக்காத மேதைகளே…