உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட்டில் நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. நகை வாங்குவதற்காக கடைக்குச் சென்ற ரீயா என்ற ஆசிரியைக்குக் கடுமையான தாகம் எடுத்துள்ளது. இதையடுத்து, நகைக் கடை உரிமையாளர் தனது ஊழியரை அனுப்பி அருகில் உள்ள கடையில் இருந்து ‘பிஸ்லெரி’ குடிநீர் பாட்டில் ஒன்றை வாங்கி வரச் சொல்லியுள்ளார். அந்த ஊழியரும் அருகில் இருந்த கடையில் இருந்து, டீப் ஃப்ரீசரில் வைக்கப்பட்டிருந்த குளிர்ந்த நீர் பாட்டிலைக் கொண்டு வந்து கொடுத்துள்ளார். கடுமையான தாகத்தில் இருந்த ஆசிரியை ரீயா, பாட்டிலைத் திறந்து யோசிக்காமல் குடித்தார். ஆனால், அந்த பாட்டிலில் இருந்தது தண்ணீர் அல்ல, அது கொடிய அமிலம் என்பது தெரிந்தபோது அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அமிலம் தொண்டைக்குள் சென்றதும் அலறியடித்த அவர், தற்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வருகிறார்.
https://twitter.com/sirajnoorani/status/2075822991724982763/photo/1
இந்த கொடூரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை, அந்த அமில பாட்டிலை விற்ற கடைக்காரரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. ஆனால், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், அந்த பாட்டில் நிறுவனத்திடமிருந்து சீல் வைக்கப்பட்ட நிலையில்தான் வந்தது என்றும் கடைக்காரர் வாதிட்டு வருகிறார். இந்த விளக்கத்தை ஏற்காத போலீசார், இது நிறுவனத்தின் சதியா அல்லது கடைக்காரரின் அலட்சியமா என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். ஒரு சாதாரண குடிநீர் பாட்டிலில் அமிலம் இருந்தது எப்படி என்ற கேள்வி, அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சோதனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், காலை 7 மணிக்குத் தொடங்கிய சோதனை முடியும் வரை…
தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம்…
தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில்,…
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காதவர்களுடன் எதற்கு கூட்டணி என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி…
முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார்…
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் நடைபெற்று வரும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரின் சோதனை நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப்…