“நானும் விஜய் ரசிகன்தான்”…. மதுராந்தகத்தில் திமுக வேட்பாளர் ஓபன் டாக்…. கொந்தளிப்பில் அறிவாலயம்…. ஆடிப்போன ஸ்டாலின்…!

Spread the love

தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தவெக மற்றும் ஆளுங்கட்சியான திமுக இடையே கடும் அரசியல் போட்டி நிலவி வரும் சூழலில், இந்த இடைத்தேர்தல் களத்தில் வெற்றி பெற இரு தரப்பும் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன. மதுராந்தகம் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான பரந்தாமன் களமிறக்கப்பட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இன்றுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவுறும் நிலையில், மதுராந்தகத்தில் இளைஞர்களிடம் பரப்புரை மேற்கொண்ட பரந்தாமன், “நானும் விஜய் ரசிகன்தான்; கல்லூரி காலத்திலும், வழக்கறிஞராக இருந்தபோதும் விஜய் ரசிகனாகவே இருந்திருக்கிறேன். ஆனால் ரசிகன் என்பதும் அரசியல் என்பதும் வேறு” என்று பேசியுள்ளார். தவெக தலைவர் விஜய்யை திமுக தலைமை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், திமுக வேட்பாளரே விஜய் பெயரைச் சொல்லி வாக்கு சேகரித்தது போன்ற இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.

பரந்தாமனின் இந்தப் பேச்சு திமுக நிர்வாகிகளிடையேயும் ஆதரவாளர்களிடையேயும் கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் தலைவரான மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரிப்பதற்குப் பதிலாக, மாற்றுக் கட்சியின் தலைவரான விஜய் பெயரைப் பயன்படுத்தி வாக்கு கேட்பது ஏற்புடையதல்ல என்று திமுகவினர் அவரை விமர்சித்து வருகின்றனர்.

மறுபுறம், திமுக வேட்பாளர் விஜய் பெயரைச் சொல்லி வாக்கு சேகரிக்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்றும், மு.க.ஸ்டாலின் பெயரைச் சொல்லி வாக்கு கேட்கக்கூட திமுகவினருக்குத் தயக்கம் வந்துவிட்டது என்றும் தவெக மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். கடந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு, தற்போது மீண்டும் வாய்ப்பைப் பெற்றுள்ள பரந்தாமனுக்கு, இந்த வீடியோ சர்ச்சை இடைத்தேர்தல் களத்தில் சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

ஐயோ… கூரையையே தூக்குறானுங்க சார்… எஸ்டேட்டில் பகல் நேரத் துணிச்சல்… ஜெரார்ட் தகடுகளைக் கழற்றிய திருடன்… சிக்கியது எப்படி?… இணையத்தில் வைரல்…!

இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ… நீ வீட்டுக்கு வா… சேர்த்து வைக்கிறோம்… நீதிமன்றத்தில் கல்யாணம் செய்துவிட்டு… புதுப்பெண்ணைச் சிறைவைத்த பெற்றோர்… மாடியிலிருந்து குதித்து விபரீத முடிவு… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!

காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…

4 மணத்தியாலங்கள் ago

“பரிகார அறையில் பள்ளி சீருடைகள்…” சிறுமிகளிடம் அத்துமீறிய போலி சாமியார்… லேப்டாப்பில் சிக்கிய ஆபாச வீடியோக்கள்…. அதிர்ச்சி பின்னணி…!!

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…

4 மணத்தியாலங்கள் ago

“வீட்டின் கதவில் ஏறிய கொடிய கட்டுவிரியன் பாம்பு…” நொடியில் பாய்ந்து எஜமானரின் குடும்பத்தை காப்பாற்றிய வளர்ப்பு பூனை…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…

4 மணத்தியாலங்கள் ago

அடியே… எல்லாத்தையும் உன் புருஷனுக்கு அனுப்பிட்டேன் பாரு… காதலன் செய்த கொடூரம்… மன உளைச்சலால் பெண் எடுத்த விபரீத முடிவு… உ . பி – யில் பதறவைக்கும் சம்பவம்…!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…

4 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கடன் சுமையால் பெற்ற பிள்ளைகளுக்கு… விஷம் கொடுத்து தந்தை தற்கொலை… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…

4 மணத்தியாலங்கள் ago