“டார்கெட் நீங்க இல்ல.. அவருதான்”…. பேர மட்டும் சொல்லுங்க.. விட்டுறோம்….. போலீசாரின் அதிர்ச்சி ரகசியத்தை உடைத்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ்….!

Spread the love

சோதனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், காலை 7 மணிக்குத் தொடங்கிய சோதனை முடியும் வரை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகத் தெரிவித்தார். வரும் 18-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு அதிகாரிகள் தன்னிடம் கூறிச் சென்றுள்ளதாகவும், விசாரணை முடித்த கையோடு தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரைக்குச் செல்லவுள்ளதாகவும் அவர் கூறினார். தன் வீட்டில் நடத்தப்பட்ட இந்த 8 மணிநேரச் சோதனை குறித்துப் பேசிய அவர், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்து காவல்துறை மற்றும் அதிகாரிகளுக்குக் கண்டனம் தெரிவித்த அவர், விசாரணை என்ற பெயரில் குறிப்பிட்ட சிலரது பெயர்களைச் சொல்ல சொல்லி மிரட்டுவதைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். “டார்கெட் நீங்க இல்லை, அவருதான்… அவர் பெயரை மட்டும் சொல்லுங்க விட்டுறோம்” என்று அதிகாரிகள் அழுத்தம் தருவது முறையான விசாரணை முறை அல்ல என்றும் சுட்டிக்காட்டினார். தான் ‘ஹிட்லர் முதலமைச்சர், கோயபல்ஸ் அமைச்சர்கள்’ என்று விமர்சித்துப் பேசியதன் காரணமாகவே இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இத்தகைய மிரட்டல்களுக்கு அஞ்சப்போவதில்லை என்பதையும் உறுதியாகத் தெரிவித்தார்.

Nanthini

Recent Posts

அடச்சீ… வண்டியை நிறுத்துடா… அலறிய பெண்… போனட்டில் தொங்கவிட்டு காதலன் ஓட்டம்… மிரள வைக்கும் அதிர்ச்சி வீடியோ… லக்னோவை உலுக்கிய நடுநடுங்கும் சம்பவம்…!

லக்னோவின் ஜனேஷ்வர் மிஸ்ரா பூங்கா அருகே பெண் ஒருவர் காரின் முன்பகுதியில் தூக்கிச் செல்லப்பட்ட கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை…

2 minutes ago

ஐயோ காப்பாத்துங்க… விஷால் மெகா மார்ட்டில் பயங்கர தீவிபத்து… அடுத்த பேரழிவா?… காஸ்கஞ்சில் பரபரப்பு… நெஞ்சை பதறவைக்கும் திக் திக் சம்பவம்…!

காஸ்கஞ்சில் உள்ள விஷால் மெகா மார்ட்டில் திடீரென பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தை அறிந்த காஸ்கஞ்ச் காவல்துறை உடனடியாகச் செயல்பட்டு…

16 minutes ago

ஐயோ… என் குழந்தைக்கு என்ன ஆச்சு?… செல்போன் மோகத்தால் நிலைகுலைந்த 10 வயது சிறுவன்… நெஞ்சை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

ஸ்மார்ட்போன்களும் மடிக்கணினிகளும் நம் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் கருவிகளாக அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், இன்று அவை அவர்களின் மனநலனை மெதுவாகச் சிதைக்கும்…

25 minutes ago

“வெட்கித் தலைகுனியப் போகிறோம்”…. மக்களை ஏமாற்றும் முதல்வர்?….. லண்டன் பயணத்தின் பின்னே உள்ள ரகசியம்….. அதிர வைக்கும் உண்மை….!

அரசியல் விமர்சகர் டாக்டர் பொன்ராஜ், 'மார்ஷல் மீடியா' யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தமிழக முதலமைச்சரின் லண்டன் பயணம் குறித்துக்…

44 minutes ago

“என்ன மன்னிச்சுடுங்கம்மா…. தங்கச்சியையாவது படிக்க வைங்க”…. மாணவியின் தற்கொலை கடிதத்தில் இருந்த நெஞ்சை பிழியும் வார்த்தை…. சோக சம்பவம்….!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத், விஜயநகர் பகுதியில் உள்ள 'கௌர் சித்தார்த்தம்' அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 16 வயது…

54 minutes ago

“என்னை கடிச்ச பாம்பு இதுதான் டாக்டர்”…. பாட்டிலில் பாம்போடு வந்த இளைஞர்…. தாம்பரம் ஹாஸ்பிட்டலில் ஷாக்….!

சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 36 வயதான மையூர் சாகீக் என்ற இளைஞர், தனது வீட்டில் வேலையில் ஈடுபட்டிருந்தபோது மரப்பலகையின்…

54 minutes ago