“வீட்டின் கதவில் ஏறிய கொடிய கட்டுவிரியன் பாம்பு…” நொடியில் பாய்ந்து எஜமானரின் குடும்பத்தை காப்பாற்றிய வளர்ப்பு பூனை…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

Spread the love

திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை ஒன்று, குடும்பத்தினரின் உயிரைக் காப்பாற்றி அனைவரின் நெகிழ்ச்சியையும் பாராட்டையும் பெற்றுள்ளது. உசேன் பாபுவின் வீட்டின் முதன்மை வாசலின் கதவு வழியாக சுமார் 2 அடி நீளமுள்ள கொடிய விஷமுள்ள கட்டுவிரியன் குட்டிப் பாம்பு ஒன்று உள்ளே நுழைய முயன்றுள்ளது. வீட்டின் மனிதர்கள் யாரும் கவனிக்காத நிலையில், ஆபத்தை உணர்ந்த வளர்ப்புப் பூனை உரத்த குரலில் ‘மியாவ்’ என ஆக்ரோஷமாகச் சத்தமிட்டுள்ளது.

சத்தம் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர் பாம்பைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அப்போது உசேன் பாபு பாம்பைப் பிடிக்க முயன்ற போது அது சீறவே, சற்றும் தாமதிக்காத பூனை உடனடியாகப் பாம்பின் மீது பாய்ந்து அதைக் கடித்து குதறி கொன்றது. வீட்டிலும் அருகிலும் சிறு குழந்தைகள் இருக்கும் நிலையில், சமயோசிதமாகச் செயல்பட்டு தங்களைக் காப்பாற்றிய வளர்ப்புப் பூனைக்கு உசேன் பாபுவின் குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Devi Ramu

Recent Posts

அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்?… சாலையில் தனியாக சென்ற… பெண்ணிடம் தவறாக நடந்த நபர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…

3 minutes ago

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

29 minutes ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

33 minutes ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

59 minutes ago

ஐயோ… அவன்தான் என் பொண்ணைக் கொன்னவன்… அவன் கூடவே என் பொண்டாட்டி ஓடிட்டா சார்… நோயாளி கணவனின் கதறல்… உ . பி – யில் அரங்கேறிய விபரீத சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவோ பகுதியில், உடல்நலம் குன்றிய கணவரை விட்டுவிட்டு, 50 வயது பெண் ஒருவர் தனது சொந்த…

1 மணத்தியாலம் ago