தாகத்திற்குத் தண்ணீர் குடித்த ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்… சீல் வைக்கப்பட்ட குடிநீர் பாட்டிலில் ஆசிட் எப்புடி?… மீரட்டை உலுக்கிய ‘ஆசிட்’ குடிநீர் பாட்டில் மர்மம்…!

By Visaka on ஆடி 12, 2026

Spread the love

உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட்டில் நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. நகை வாங்குவதற்காக கடைக்குச் சென்ற ரீயா என்ற ஆசிரியைக்குக் கடுமையான தாகம் எடுத்துள்ளது. இதையடுத்து, நகைக் கடை உரிமையாளர் தனது ஊழியரை அனுப்பி அருகில் உள்ள கடையில் இருந்து ‘பிஸ்லெரி’ குடிநீர் பாட்டில் ஒன்றை வாங்கி வரச் சொல்லியுள்ளார். அந்த ஊழியரும் அருகில் இருந்த கடையில் இருந்து, டீப் ஃப்ரீசரில் வைக்கப்பட்டிருந்த குளிர்ந்த நீர் பாட்டிலைக் கொண்டு வந்து கொடுத்துள்ளார். கடுமையான தாகத்தில் இருந்த ஆசிரியை ரீயா, பாட்டிலைத் திறந்து யோசிக்காமல் குடித்தார். ஆனால், அந்த பாட்டிலில் இருந்தது தண்ணீர் அல்ல, அது கொடிய அமிலம் என்பது தெரிந்தபோது அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அமிலம் தொண்டைக்குள் சென்றதும் அலறியடித்த அவர், தற்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வருகிறார்.

https://twitter.com/sirajnoorani/status/2075822991724982763/photo/1

   

இந்த கொடூரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை, அந்த அமில பாட்டிலை விற்ற கடைக்காரரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. ஆனால், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், அந்த பாட்டில் நிறுவனத்திடமிருந்து சீல் வைக்கப்பட்ட நிலையில்தான் வந்தது என்றும் கடைக்காரர் வாதிட்டு வருகிறார். இந்த விளக்கத்தை ஏற்காத போலீசார், இது நிறுவனத்தின் சதியா அல்லது கடைக்காரரின் அலட்சியமா என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். ஒரு சாதாரண குடிநீர் பாட்டிலில் அமிலம் இருந்தது எப்படி என்ற கேள்வி, அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.