காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் அரசியல் அறத்திற்கு விரோதமாகவும், நாகரீகமற்ற முறையிலும் பேசியுள்ளார் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணி தர்மத்திற்கு மாறாக காங்கிரஸ் செயல்பட்டதை அரசியல் ரீதியாக விமர்சிப்பதைத் தாளாமல், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சுகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் மாணிக்கம் தாக்கூர் தனிப்பட்ட முறையில் பிதற்றி வருவதாக அவர் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.
அண்மையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் குழந்தைக்கு அனிதா ராதாகிருஷ்ணன் சீர் வழங்கியது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இதற்குப் பதிலடி கொடுத்துள்ள அவர், “நான் சீமான் குழந்தைக்குச் சீர் வழங்கியது, எனக்கும் அண்ணன் காளிமுத்து அவர்களுக்கும் உள்ள குடும்ப உறவின் தொடர்ச்சி அன்றி வேறொன்றுமில்லை” என்று விளக்கமளித்துள்ளார். இதனைத் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது அரசியல் நாகரீகம் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திமுகவின் இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலினைப் பற்றி விமர்சிப்பதற்கு, காங்கிரஸ்காரர்களால் ‘மணி’ என்று அழைக்கப்படும் மாணிக்கம் தாக்கூருக்கு எந்தவித தார்மீக உரிமையோ அல்லது அருகதையோ இல்லை என்றும் அனிதா ராதாகிருஷ்ணன் சாடியுள்ளார். தமிழ்நாட்டின் உரிமைக்காகவும், தமிழர்களின் தன்மானத்திற்காகவும் விடாப்பிடியாகப் போராடும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலில் செயல்படும் உறுதிமிக்க தொண்டனாகத் தான் எப்போதும் பணியாற்றி வருவதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளையரை எதிர்த்து வீரச்சமர் புரிந்த வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், தளபதி வெள்ளையத்தேவன், வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார் மற்றும் மத்திய அமைச்சரையே விமான நிலையத்தில் மடக்கி கேள்வி கேட்ட கே.டி.கோசல்ராம் ஆகியோர் பிறந்த மண்ணில் இருந்து கொண்டு, தாங்கள் தமிழ் மக்களுக்கான உறுதியான அரசியலைச் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மாணிக்கம் தாக்கூர் இத்தகைய அரசியலற்ற பேச்சுகளை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் எனத் தனது அறிக்கையின் வாயிலாக எச்சரித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் இருந்து 25-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் குடியாத்தம் வழியாக சேலம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.…
தமிழகத்தில் சாதிவாரி சமூக-பொருளாதார கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பல பத்தாண்டுகளாக மாநில அரசியலில் முக்கிய விவாதப் பொருளாக…
தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஆயத்த பணிகளைத் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் முறைப்படி தொடங்கியுள்ளது.…
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள குருந்தனி வாரியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த தெய்வேந்திரன், பொள்ளாச்சி அருகே டாஸ்மாக் பார் லீசுக்கு…
தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள இஸ்லாம்நகர் திலியா பகுதியில், வாடகை வீட்டில் வசித்து வந்த பர்வேஸ் என்பவன், செவ்வாய்க்கிழமை…