Categories: சினிமா

என்னது, தளபதி 69 பாலையா படத்தோட ரீமேக்கா..? விஜயின் கடைசி படத்துக்கு ரெடியான ஆப்பு..!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜய்யின் இறுதி படமாக அறிவிக்கப்பட்டுள்ள தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் பிரம்மாண்டமான பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து முதல் கட்ட படப்பிடிப்புக்காக பாடல் காட்சியின் படப்பிடிப்பு எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் சென்னையில் பிரம்மாண்டமான செட் போடப்பட்ட நடத்தப்பட்டது. அதில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இருவரின் காம்பினேஷன் காட்சிகளை எடுக்க இயக்குனர் வினோத் திட்டமிட்டு இருந்தார். தளபதியின் கடைசி படமாக உருவாகி வரும் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் அனைத்து தரப்பினரையும் எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகி வருகின்றது. நடிகர் விஜயின் தளபதி 69 திரைப்படம் கடந்த மாத ஐந்தாம் தேதி பூஜை உடன் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கியது. அதற்கு அடுத்த நாடு இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில்  தளபதி 69 படம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தளபதி 69 படம் பாலையாவின் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்று கூறப்பட்டது.

ஆனால் அப்படி கிடையாது என்று படக்குனு கூறிய நிலையில் அது உண்மை தான் போல. அதாவது பையனூரில் செட் போடப்பட்டுள்ளதாம். அதை பார்க்கும்போது அப்படியே பகவந்த் கேசரி பட செட் மாதிரியே உள்ளதாம். மேலும் பாலையாவின் படத்தில் ஸ்ரீலீலாவை கடத்திட்டு செல்வார்கள் அதை பாலையா லாரியில் போய் காப்பாற்றுவார்.

#image_title

அதேபோல் தளபதி 69 படத்தில் மமீதா பைஜூவை கடத்திட்டு போவார்களாம். விஜய் பைக்கில் சென்று துரத்துவாராம். விஜய் கடைசியாக சினிமாவை விட்டு போகும்போது ஒரு மசாலா படத்தில் நடித்துவிட்டு ஒரு வசூலை கொடுத்து விட்டு போகலாம் என்று நினைப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது போன்ற படத்தில் நடிப்பதால் விஜய்க்கு எந்த பயனும் இல்லை. புரொடியூசர்களுக்கு தான் வருமானம்.

Soundarya

Recent Posts

BREAKING: தவெக MLA ராஜினாமா?… சொந்த கட்சி நிர்வாகியே போட்ட வெடிகுண்டு புகாரால் பரபரப்பு…. விஜய்க்கு அடுத்த ஷாக்…!

சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…

4 minutes ago

“சபை முடிஞ்சிருச்சுன்னு டிவில பார்த்தா அமைச்சர் பேசிக்கிட்டிருக்கார” உதயநிதி வைத்த குற்றச்சாட்டு.. சபாநாயகர் கொடுத்த அதிரடி ‘ட்விஸ்ட்’..!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…

6 minutes ago

சட்டமன்றத்தில் விஜய் ருத்ரதாண்டவம்..! “Evils பற்றி Devils பேசக் கூடாது” முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சைகையைச் செய்து காட்டி முதல்வர் விஜய் அதிரடி..!!!

தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…

13 minutes ago

“கடந்த 9 மாசமா சட்டம் ஒழுங்கு DGP-யே தமிழ்நாட்டுல இல்ல” திமுக ஆட்சியின் அலட்சியத்தை அம்பலப்படுத்திய CM விஜய்…!!

சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…

16 minutes ago

மக்கள் பணத்தை தொட்ட யாரையும் சும்மா விட மாட்டோம்… ஊழல் ஒன்னு ஒன்னா வெளியே வரும்… ஏன்பா பயந்து நடுங்குறீங்க..? சட்டசபையை அதிர வைத்த முதல்வர் விஜய்..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…

20 minutes ago

BREAKING: முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. திமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…

23 minutes ago