Categories: சினிமா

13 வயசுல ஜெயலலிதா பண்ணின விஷயத்தை பார்த்து 9 வயசுல நான் மிரண்டுட்டேன்… ரகசியத்தை பகிர்ந்த லக்ஷ்மி…

Spread the love

லட்சுமி தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் மூத்த மற்றும் பிரபலமான நடிகை ஆவார். இவரது தந்தை எரகுடிபாடி வரதாராவ் மற்றும் தாயார் குமார் ருக்மணி இருவருமே திரைத்துறையில் நடிகர்களாக பணியாற்றியவர்கள். அதனால் இவருக்கு இளம் வயதிலேயே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இவரது இயற்பெயர் யாரகுடிப்பாடி வெங்கட மகாலட்சுமி என்பதாகும். அதை சுருக்கி தான் லக்ஷ்மி என்று கூப்பிடுகிறார்கள். தமிழ், மலையாளம், கன்னடா, தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளிலும் பிரபலமான புகழ்பெற்ற நடிகையாக திகழுவர் லட்சுமி. 1968 ஆம் ஆண்டு ஜீவனாம்சம் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.

1980களில் தென்னிந்தியாவில் வெற்றிகரமான மற்றும் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் லட்சுமி. இவர் நடித்த சம்சாரம் அது மின்சாரம், சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற திரைப்படங்கள் காலத்தால் என்றும் மறக்க முடியாதவை. தேசிய திரைப்பட விருதையும் அதற்காக வென்றிருக்கிறார் லட்சுமி. நடிப்பது மட்டுமில்லாமல் சில திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார் லட்சுமி.

வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரை தொலைக்காட்சி சேனல்களில் சமூக பிரச்சனைகளை தீர்வு காணும் விவாதங்களையும் தொகுத்தும் வழங்கி இருக்கிறார் லட்சுமி. இன்றளவும் தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார் லட்சுமி. தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் அதையும் எடுத்துக்கொண்டு நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லட்சுமி ஜெயலலிதாவை பற்றி பேசி இருக்கிறார்.

லட்சுமி கூறியது என்னவென்றால், ஜெயலலிதா ஒரு அதீத அழகி மற்றும் அதீத புத்திசாலி. அவரை போல் அறிவுபூர்வமான தைரியமான பெண்மணியை பார்ப்பது அரிது. நான் சிறுவயதிலிருந்தே ஜெயலலிதாவை பார்த்திருக்கிறேன். ஏனென்றால் என் அம்மாவும் நடிகை அவங்களுடைய அம்மாவும் நடிகை. எனக்கு ஒன்பது வயதாக இருக்கும்போது ஒரு நிகழ்ச்சிக்கு சென்றேன். அப்போது 13 வயதான ஜெயலலிதா ஆங்கிலத்தில் வோட் ஆப் தேங்க்ஸ் சொல்வதை கேட்டு எல்லாருமே மிரண்டு பாராட்டி விட்டார்கள். நானுமே மிரண்டு விட்டேன். அந்த தனித்துவமான அவருடைய திறமை தைரியம் தான் அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்து அவர் பெயரை நிலைநாட்டி சென்றிருக்கிறார் என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் லட்சுமி.

admin

Recent Posts

பெரும் பரபரப்பு.! “மாம்பழத்தில் விஷம்” பாமக ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், தேர்தல் நெருங்கும் வேளையில் "மாம்பழத்தில் விஷம்" எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை…

1 minute ago

BREAKING: தவெகவினர் என் மீது செருப்பை வீசினர்… திவ்யா சத்யராஜ் பரபரப்பு புகார்..!!

திமுக மாநிலத் துணைச் செயலாளரான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக தொண்டர்கள் தன் மீது செருப்பு வீசியதாகக்…

5 minutes ago

“விஜய் கொடுத்த அந்த ஒரு அனுமதி” என்னை அவர் கைவிடல… மேடையிலேயே கண்ணீர் விட்ட செங்கோட்டையன்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்…

9 minutes ago

ஷாக்.! “ஒரே ஒரு இரவு மட்டும் அவனோடு” மரண படுக்கையில் மனைவி சொன்ன அந்த வார்த்தை… மனைவியின் கடைசி ஆசையால் நிலைகுலைந்து போன கணவன்..!!

மரணப் படுக்கையில் இருந்த மனைவி, தனது கணவரிடம் கேட்ட அந்த கடைசி ஆசை கணவனின் இதயத்தையே நொறுக்கிவிட்டது. "ஒரே ஒரு…

15 minutes ago

“ஐயோ காப்பாத்துங்க” லிப்டில் நுழைய முயன்ற மருத்துவர்… தலை துண்டானதால் அலறிய செவிலியர்… லிஃப்ட்டுக்குள் 15 நிமிடம் பகீர்… வைரலாகும் திக் திக் வீடியோ..!

2003-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 35 வயதான அறுவை சிகிச்சை…

26 minutes ago

மனசாட்சியே இல்லையா..? ரயில் நிலையத்திற்கு பெண் தூக்கி வந்த சூட்கேஸ்.. சோதனையில் தெரிந்த ரத்தக் கறை… உள்ளே இருந்ததைப் பார்த்து அலறிய போலீசார்..!

தன்னுடன் ஒரு சூட்கேஸை எடுத்துச் சென்ற பெண் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து…

34 minutes ago