லட்சுமி தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் மூத்த மற்றும் பிரபலமான நடிகை ஆவார். இவரது தந்தை எரகுடிபாடி வரதாராவ் மற்றும் தாயார் குமார் ருக்மணி இருவருமே திரைத்துறையில் நடிகர்களாக பணியாற்றியவர்கள். அதனால் இவருக்கு இளம் வயதிலேயே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இவரது இயற்பெயர் யாரகுடிப்பாடி வெங்கட மகாலட்சுமி என்பதாகும். அதை சுருக்கி தான் லக்ஷ்மி என்று கூப்பிடுகிறார்கள். தமிழ், மலையாளம், கன்னடா, தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளிலும் பிரபலமான புகழ்பெற்ற நடிகையாக திகழுபவர் லட்சுமி. 1968 ஆம் ஆண்டு ஜீவனாம்சம் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.
1980களில் தென்னிந்தியாவில் வெற்றிகரமான மற்றும் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் லட்சுமி. இவர் நடித்த சம்சாரம் அது மின்சாரம், சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற திரைப்படங்கள் காலத்தால் என்றும் மறக்க முடியாதவை. தேசிய திரைப்பட விருதையும் அதற்காக வென்றிருக்கிறார் லட்சுமி. நடிப்பது மட்டுமில்லாமல் சில திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார் லட்சுமி.
வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரை தொலைக்காட்சி சேனல்களில் சமூக பிரச்சனைகளை தீர்வு காணும் விவாதங்களையும் தொகுத்தும் வழங்கி இருக்கிறார் லட்சுமி. இன்றளவும் தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார் லட்சுமி. தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் அதையும் எடுத்துக்கொண்டு நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லட்சுமி ஜெயலலிதாவை பற்றி பேசி இருக்கிறார்.
லட்சுமி கூறியது என்னவென்றால், ஜெயலலிதா ஒரு அதீத அழகி மற்றும் அதீத புத்திசாலி. அவரை போல் அறிவுபூர்வமான தைரியமான பெண்மணியை பார்ப்பது அரிது. நான் சிறுவயதிலிருந்தே ஜெயலலிதாவை பார்த்திருக்கிறேன். ஏனென்றால் என் அம்மாவும் நடிகை அவங்களுடைய அம்மாவும் நடிகை. எனக்கு ஒன்பது வயதாக இருக்கும்போது ஒரு நிகழ்ச்சிக்கு சென்றேன். அப்போது 13 வயதான ஜெயலலிதா ஆங்கிலத்தில் வோட் ஆப் தேங்க்ஸ் சொல்வதை கேட்டு எல்லாருமே மிரண்டு பாராட்டி விட்டார்கள். நானுமே மிரண்டு விட்டேன். அந்த தனித்துவமான அவருடைய திறமை தைரியம் தான் அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்து அவர் பெயரை நிலைநாட்டி சென்றிருக்கிறார் என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் லட்சுமி.