ksr

நாட்டாமை படத்துல லட்சுமியை தூக்கிட்டு குஷ்பூவை நடிக்க வச்சதுக்கு காரணம் இதுதான்… உண்மையை உடைத்து பேசிய KS ரவிக்குமார்…

By Meena on ஜனவரி 3, 2025

Spread the love

KS ரவிக்குமார் தமிழ் சினிமாவில் பணியாற்றும் இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், திரைப்பட எழுத்தாளர் மற்றும் நடிகராவார். இவர் ஆரம்பத்தில் பாரதிராஜா, விக்ரமன், நாகேஷ், ராமராஜன், கே. ரங்கராஜ் போன்ற பல்வேறு இயக்குனர்களுக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்தார். 1990 ஆம் ஆண்டு புரியாத புதிர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

   

1991 ஆம் ஆண்டு சேரன் பாண்டியன் என்ற திரைப்படத்தை இயக்கி அதில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் KS ரவிக்குமார். 1994 ஆம் ஆண்டு இவர் நாட்டாமை திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பேரும் புகழும் பெற்றார். இந்த திரைப்படம் மாநில திரைப்பட விருதுகளை வென்றது. தொடர்ந்து பெரிய குடும்பம், பரம்பரை, முத்து, அவ்வை சண்முகி, தர்மசக்கரம், நட்புக்காக, படையப்பா, மின்சாரக் கண்ணா போன்ற பல வெற்றி திரைப்படங்களை இயக்கி பிரபலமாக இருந்தார் KS ரவிக்குமார்.

   

2000 காலகட்டத்திற்கு பிறகு வில்லன், சரவணா, வரலாறு, தசாவதாரம், லிங்கா, போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் KS ரவிக்குமார். அது மட்டுமில்லாமல் நடிகராக பல திரைப்படங்களில் நடித்து அசத்தியிருப்பார் KS ரவிக்குமார். இந்நிலையில் KS ரவிக்குமார் இயக்கத்தில் மிகப் பிரபலமான புகழ்பெற்று வசூல் சாதனை படைத்தும் பல நாட்கள் தியேட்டரில் ஓடிய படம் தான் நாட்டாமை. இந்த நாட்டாமை திரைப்படத்தில் சரத்குமார் டபுள் ஆக்ட் செய்திருப்பார். இதில் மூத்த சரத்குமார்க்கு ஜோடியாக குஷ்பு நடித்து அசத்தியிருப்பார். இந்த கதாபாத்திரத்தில் முதலில் லட்சுமி தான் நடிக்க இருந்தாராம். இதைப்பற்றி அவர் பேசியிருக்கிறார்.

 

KS ரவிக்குமார் கூறியது என்னவென்றால், நாட்டாமை படத்தில் முதலில் சரத்குமாருக்கு ஜோடியாக குஷ்புக்கு பதில் லட்சுமியை தான் நான் கமிட் செய்யலாம் என்று அவர் வீட்டுக்கு சென்று கொண்டிருக்கும்போது வழியில் ஒரு சூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றேன். அங்கு குஷ்பு நடித்துக் கொண்டிருந்தார். அவரிடம் இதைப் பற்றி கூறும்போது நான் நடிக்கிறேன் எனக்கு கதை மிகவும் பிடித்திருக்கிறது என்று கூறினார். நான் இது கொஞ்சம் வயதான தோற்றம் என்று கூறியவுடன் நான் ஏற்கனவே அண்ணாமலை படத்தில் வயதான தோற்றத்தில் நடித்திருக்கிறேன் என்று கூறினார்.

எனக்கு என்ன முடிவு எடுக்க வேண்டும் என்றே தெரியவில்லை. உடனே நாட்டாமை படத்தின் தயாரிப்பாளரிடம் சென்று கேட்டேன். அவர்களும் குஷ்பூ இப்போ ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகை தான் அவரை நடிக்க வைத்து விடுவோம் என்று அவர்கள் கூறியதால் நான் இந்த படத்தில் குஷ்புவை நடிக்க வைத்தேன். ஆனால் இந்த விஷயம் லட்சுமிக்கு அந்த நேரத்தில் தெரியாது நான் பிறகு சமீபத்தில் கொடுத்த நேர்காணல் மூலமாகத்தான் அவர் தெரிந்துகொண்டார் என்று ரகசியத்தை பதிந்திருக்கிறார் KS ரவிக்குமார்.