#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் தனுஷ் காட்டில் தற்போது அடை மழை பெய்து வருகின்றது. தொடர்ந்து அவரின் திரைப்படத்தில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருவதைப் பார்த்து ரசிகர்கள் இவர் ஒரு முடிவோட தான் இருக்காரு என்று கூறி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை என்றாலும் தன்னுடைய அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்புத் திறமையை காட்டி தற்போது கொடி கட்டி பறந்து வருகிறார். நடிகர் தனுஷ் நடிகராக மட்டுமல்லாமல் பா பாண்டி என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக களம் இறங்கி அசத்தியிருந்தார். தொடர்ந்து இயக்கத்தில் வரவேற்பு கிடைத்த போதிலும் நடிக்க மட்டுமே செய்து வந்தார்.
ஹாலிவுட் வரை சென்று வந்த நடிகர் தனுஷ் பல வருட இடைவெளிக்குப் பிறகு ராயன் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற இரண்டு திரைப்படங்களை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் ஏறத்தாழ முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது குபேரன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இயக்குனர் சேகர் கமலா இயக்கத்தில் தனுசுடன் இணைந்து நாகார்ஜுனாவும் நடித்து வருகிறார்.
தனுசுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மும்பை தாராவில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதற்கிடையில் இப்படத்தினை தொடர்ந்து தனுஷ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் இயக்க உள்ளாராம்.
இப்படத்தின் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முடிந்துள்ளதாம். அதாவது ஸ்ரீகாரம் என்ற படத்தில் இயக்கிய கிஷோர் ரெட்டி தான் நடிகர் தனுஷின் அடுத்த திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும், இப்படத்தில் பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்க உள்ளதாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த திரைப்படத்தை வாரிசு படத்தை தயாரித்த தில் ராஜ் தான் தயாரிக்கப் போகிறார் என கூறி வருகிறார்கள்.
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…
சமூக வலைத்தளமான X தளத்தில் அலுவலகம் ஒன்றின் விசித்திரமான அறிவிப்பு ஒன்று வெளியாகி, தற்பொழுது பெரும் வைரலாகி வருகிறது. அந்த…
சீனாவின் நான்செங் நகரில் வானில் பாராகிளைடிங் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென வீசிய பலத்த காற்றினால் தனது கட்டுப்பாட்டை இழந்தார்.…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வபெருந்தகை, தனது பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து அகில இந்திய காங்கிரஸ்…