Categories: சினிமா

கடத்தல் தொடர்பான கேள்விக்கு ரஜினி, விஜயை கோர்த்துவிட்ட இயக்குனர் அமீர்.. பிரஷ்மீட்டில் கொந்தளிப்பு..!

Spread the love

இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடிக்கும் உயிர் தமிழுக்கு என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஜாபர் சாதிக் வழக்கு குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அதற்கு இயக்குனர் அமீர் பதிலளித்துள்ளார். ஆதாம் பாவா இயக்கத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் உயிர் தமிழுக்கு இந்த திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இதில் இயக்குனர் அமீரிடம் பத்திரிக்கையாளர்கள் பல கேள்விகளை கேட்டனர். உங்கள் நண்பர் ஜாபர் சாதிக் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து நீதிமன்றம் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனாலும் அவர் என்ன தொழில் செய்தார் என்பது உங்களுக்கு எப்படி தெரியாமல் இருந்திருக்கும், இவ்வளவு பணம் எங்கிருந்து வருகின்றது என்று உங்களுக்கு சந்தேகம் ஏன் வரவில்லை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அமீர் இந்த கேள்வியை நீங்கள் லைக்கா ஓனரிடம் கேட்டீர்களா ஒரு கார்ப்பரேட் நிறுவனம் செய்தால் கேட்க மாட்டீர்கள். ஆனால் என்னை போன்ற தனி நபரிடம் இந்த கேள்வியை கேட்பது என்ன நியாயம். அவர் மீது இதுபோன்ற குற்றச்சாட்டு இருக்கு, ரஜினி, விஜய் கேட்டார்களா ஏன் என்னை மட்டும் கேட்கிறீர்கள் என்று பதில் அளித்திருந்தார்.

அதை தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த அமீரிடமிருந்து இயக்குனர் கரு பழனியப்பன் மைக்கை பிடுங்கி பேச தொடங்கினார். எல்லாம் யானை எப்படி இருக்கும் என்பதை சொல்ல நினைக்கிறோம். நீங்கள் தடவி பார்ப்பது தும்பிக்கை, நான் தடவி பார்ப்பது கால், அவர் தடவி பார்ப்பது வயிறு, அனைவரின் கண்ணும் கட்டப்பட்டு இருக்கு யாருக்கு என்ன என்பது தெரியாது.

ஊடகத்தினர் அவசரமாக தீர்ப்பு எழுத வேண்டாம். விசாரணையை நீங்கள் நடத்தாதீர்கள். இது உயிர் தமிழுக்கு படத்தின் செய்தியாளர் சந்திப்பு, இதற்கான கேள்வியை மட்டும் நீங்கள் கேளுங்கள் என்று பேசி இருந்தார், கடைசி வரை இந்த பேச்சுக்கு முடிவு வரப் போவதில்லை என்று அவர் கூறியிருந்தார்.

Mahalakshmi

Recent Posts

“47-ல் 6 போச்சு.. இப்போ 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெக பக்கம்?”….. எடப்பாடி தலையில் இடியை இறங்கிய செங்கோட்டையன்…. பரபரப்பு பேட்டி….!

தமிழக அரசியல் களத்தில் தவெக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளிடையே நடக்கும் கருத்து மோதல்களும் அரசியல் நகர்வுகளும் பெரும் விவாதப்…

1 minute ago

“1 வாரம்தான் டைம்…. அதுக்குள்ள இத பண்ணனும் இல்லனா?”…. முதல்வர் விஜய்க்கு துரைமுருகன் விதித்த கெடு… பற்றி எரியும் தமிழக அரசியல் களம்….!

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 3 ரகசிய கோப்புகள் விவகாரம் மற்றும் தவெக உறுப்பினர்களின் பேச்சு குறித்து திமுக…

7 minutes ago

“பல ஆண்டுகளாக பிச்சை எடுத்த மூதாட்டி…” வீட்டில் சிக்கிய ரூ.1 கோடிக்கும் அதிகமாக பணம்…. மறைவுக்குப் பின் வெளிவந்த மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை…!!

கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியில், பள்ளிவாசல் அருகே பல ஆண்டுகளாக அமர்ந்து பிச்சை எடுத்து வந்த முதிய பெண்மணி ஒருவர்…

37 minutes ago

பார்த்தாலே உடம்பு நடுங்கும்..! மரமாக மாறும் மனிதர்… உலகையே மிரள வைத்த விசித்திர நோய்… வாழ்நாள் முழுவதும் தீராத வேதனை…!!

'மர மனித நோய்' என்று பரவலாக அறியப்படும் எபிடெர்மோடிஸ்பிளாசியா வெருசிஃபார்மிஸ் என்பது மனிதர்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய ஒரு மிக அரிதான…

44 minutes ago

BIG BREAKING: ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்… சற்று முன் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர்…

52 minutes ago

“காதலால் சின்னாபின்னமான குடும்பம்”… 2 கொலை… ஒரே ஒரு ஊசியில் முடிந்த வாழ்க்கை”… மொத்தக் குடும்பத்தையும் அழித்த கொடூரக் காதல் கதை…!!

சங்கரெட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த சுரேகா என்ற இளம்பெண், தனது காதல் திருமணத்திற்குப் பெற்றோர் சம்மதிக்காத…

55 minutes ago