#image_title
தமிழ் சினிமாவில் மே 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களின் லிஸ்ட்டை இந்த தொகுப்பில் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் கடந்த நான்கு மாதங்களாக வெளியான எந்த திரைப்படமும் அந்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை. மலையாள சினிமா சக்க போடு போட்டு வருகின்றது.
தொடர்ந்து 5 சிறிய பட்ஜெட் படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வரும் நிலையில் தமிழ் சினிமாவில் இன்னும் ஒரு திரைப்படம் கூட அப்படி அமையவில்லை. சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி சுமாரான வெற்றியை பெற்றிருக்கின்றது. இந்நிலையில் வருகிற வெள்ளிக்கிழமை மே 10ஆம் தேதி 5 திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதில் முதலாவதாக பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தை இயக்கிய இலன் இயக்கத்தில் நடிகர் கவின் நடிக்கும் ஸ்டார் திரைப்படம் வெளியாக உள்ளது. இதுவரை நடிக்காத புதிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார் நடிகர் கவின். அதுமட்டுமில்லாமல் சினிமாவில் வாழ்க்கை தேடி அலையும் இணைகர்களின் போராட்டத்தை கதையாக எடுத்திருக்கின்றார்கள்.
இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், தன்யா ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ரசவாதி. இந்த திரைப்படமும் வரும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தது.
சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது அவர் நான்தான் கிங்கு என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். திருமணம் செய்ய பெண் தேடும் இளைஞர்களின் பிரச்சனை என்ன என்பதை குறித்த படம் தான் இது. இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெரும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.
அடுத்ததாக ராஜேஷ் இயக்கத்தில் சிக்கல் ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் மாயவன் வேட்டை. இந்த திரைப்படமும் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. இது முழுக்க முழுக்க ஹாரர் கதையாக உருவாகியுள்ளதால் கவினின் ஸ்டார் படத்திற்கு டப் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக அமீர் ஆனந்த்ராஜ், இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் உயிர் தமிழுக்கு. இந்த திரைப்படம் வருகிற பத்தாம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸாக உள்ளது . இப்படத்தை இயக்குனர் ஆதம் பவா இயக்கி இருக்கின்றார்.
ஹைதராபாத் கச்சிபௌலியில் உள்ள அஞ்சையா நகரில் அமைந்திருந்த 7 மாடி கட்டிடம் ஒன்றை ஹைட்ரா நிர்வாகம் இடித்துத் தள்ளியுள்ளது. அருகில்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், தான் போட்டியிட்ட இரு தொகுதிகளில் பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு…
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், எதிர்பாராத ஒரு நபர் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளார். லா ஜொல்லா பகுதியில்…
சென்னைக்கு அருகிலுள்ள பரந்தூர் பகுதியில் 2-வது புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெற்ற 'சத்ரோன் கி கூஞ்ச்' என்ற இளைஞர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்…
திருப்பத்தூர் அண்ணாநகர் கூட்டுச் சாலையில், தனியார் பேருந்து ஒன்று கல்லூரிப் பேருந்து மீது அதிவேகமாக மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.…