“தினமும் என் காலை தொட்டு கும்பிடுங்க” வற்புறுத்திய ஆசிரியர்… மாணவர்கள் மறுத்ததால் அரங்கேறிய கொடூர சம்பவம்..!!

Spread the love

ஒடிசா மாநிலம் மயூராஜி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்றில் பணியாற்றி வருபவர் சுகந்தி கர். இவர் பள்ளியில் காலை இறைவணக்கத்திற்கு பிறகு 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களை தன்னுடைய காலைத் தொட்டு வணங்க வேண்டும் என்று வற்புறுத்தி வந்துள்ளார். கடந்த சில வாரங்களாக மாணவர்கள் சுகந்தியின் காலை தொட்டு வணங்கி வந்துள்ளார்கள் .இந்த நிலையில் கடந்த வாரம் வியாழக்கிழமை இறைவணக்கத்திற்கு பிறகு தன்னுடைய காலை தொட்டு வணங்க ஆசிரியர் சுகந்தி வற்புறுத்தி உள்ளார்.

ஆனால் மாணவர்கள் தொட்டு வணங்க மறுப்பு தெரிவித்துள்ளார்கள். இதனால் கோபம் அடைந்த சுகந்தி பிரம்பால் மாணவர்களை சரமாரியாக தாக்கியதில் மாணவ மாணவியர் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் குறித்து அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் காலை தொட்டு வணங்காததால் மாணவ மாணவியரை ஆசிரியர் தாக்கியது உறுதியானது. இதனை அடுத்து சுகந்தியை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Soundarya

Recent Posts

“ஷாக்… தேசிய கீதத்தின் போது 15 வயது இந்திய வீரருக்கு நேர்ந்த விசித்திர சம்பவம்… பின்னணியில் இருக்கும் உண்மை என்ன…?”

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…

2 மணத்தியாலங்கள் ago

“‘திருமணம் பிடிக்கலனா விட்ருக்கலாம்… எதுக்கு என் மகன கொன்னீங்க…?’ – கொலை வழக்கில் மனம் உடைந்து.. கண்ணீருடன் தந்தை எழுப்பிய… நியாயமான கேள்வி…!!”

மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…

3 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு செக் வைக்க சீமானை களம் இறக்குகிறதா திமுக…? அம்பாசமுத்திரத்தில் அதிரடி திருப்புமுனை… பின்னணியில் மெகா கூட்டணி வியூகம்…!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…

3 மணத்தியாலங்கள் ago

ச்சீ… பெற்ற தந்தை என்றும் பாராமல்… நிலத்துக்காக நடுரோட்டில் கொடூரமாக இழுத்துச் சென்று தாக்கிய பிஎஸ்எஃப் வீரர்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…

3 மணத்தியாலங்கள் ago

மனிதநேயம் எங்கே போனது…? திருமண ஊர்வலத்தில் குதிரை மீது… நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…

3 மணத்தியாலங்கள் ago

த்ரிஷாவுக்கு திருமணத்தில் நம்பிக்கையே இல்லையா…? வைரலாகும் ‘தக் லைஃப்’ மேடை ரகசியம்…! த்ரிஷாவின் பழைய வீடியோ இப்போது திடீரென வைரலாவது ஏன்…?

திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…

3 மணத்தியாலங்கள் ago