திருப்பூர் மாவட்டம் மங்கலம் சாலை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 17 வயது மாணவர் ஒருவர் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக செல்போன் பயன்படுத்தி வந்ததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் சிறுவனிடம் கேட்டனர். அப்போது அந்த சிறுவன் தன்னுடைய கணித ஆசிரியர் ஆதீஸ் என்பரிடம் பேசுவதாக கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த சிறுவனின் தந்தை சிறுவனுடைய செல்போனை சோதனை செய்துள்ளார்.
அப்போது கணித ஆசிரியர் ஆதீஸ் தன்னுடைய அந்தரங்க உறுப்பை படம் எடுத்து இன்ஸ்டாகிராம் மூலம் மாணவனுக்கு அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் ஆதீசை விசாரித்துள்ளனர் . அப்போது ஆதீஸ் சிறுவனுக்கு அந்தரங்க உறுப்பை படம் பிடித்து இன்ஸ்டாகிராம் மூலம் அனுப்பியதை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போக்ஸோ சட்டத்தின் கீழ் ஆதீஸை கைது செய்துள்ளனர்.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…