இவரது பெயரைத்தான் டாடா சுமோ காருக்கு பெயரா வச்சிருக்காங்க? இவர் அப்படி என்ன வித்தையை செஞ்சிக் காட்டுனாருன்னு வாங்க பாக்கலாம்!

By Arun on ஏப்ரல் 22, 2024

Spread the love

“டாடா” நிறுவன கார்களில் மிகவும் பிரபலமான கார் என்றால் அது டாடா சுமோதான். சிறு குழந்தைகளுக்கும் டாடா சுமோ என்ற பெயர் மிகவும் பரிச்சயமானவை. அப்படிப்பட்ட டாடா சுமோ என்ற பெயர் உருவானதற்கு காரணமான ஒருவரை குறித்துதான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் எப்போதும் பெரிய பொறுப்பில் இருக்கும் எக்ஸிகியூட்டிவ் எஞ்சினியர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு உண்ணும் வழக்கம் இருக்கிறதாம். ஆனால் அதில் ஒரு எஞ்சினியர் மட்டும் அடிக்கடி மதிய உணவின் போது காணாமல் போய்விடுவாராம்.

   

   

அவர் அப்படி அடிக்கடி எங்கு செல்கிறார் என்று அவரை பின் தொடர்ந்தபோதுதான் தெரியவந்ததாம், அவர் அந்த நிறுவனத்தின் அருகில் உள்ள டாபா ஒன்றிற்கு மதிய உணவிற்காக போகிறார் என்று. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அந்த டாபா உணவகத்திற்கு டிரக் டிரைவர்கள் பலரும் உணவருந்த வருவார்களாம்.

 

அவ்வாறு வரும் டிரக் டிரைவர்களிடம் டாடா நிறுவனத்தின் டிரக்குகளில் உள்ள குறைகளை கேட்டுத் தெரிந்துகொள்வாராம். அதன் பின் டாடா நிறுவனத்தின் Research and Development குழுவிடம் அந்த குறைகளை எல்லாம் கூறுவாராம். இவ்வாறு டாடா நிறுவனத்தின் வளர்ச்சிக்காக உழைத்த அந்த எஞ்சினியரின் பெயர் Sumant Moolgoakar. அவரை கௌரவப்படுத்தும் வகையில் Tata நிறுவனத்தின் தயாரிப்பான சுமோவுக்கு “SUMO” (SUmant MOolgoakar) என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மேலும் இவருக்கு 1990 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.