கமலின் நாயகன் முதல் சித்தி சீரியல் வரை நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கா?… இப்போ என்ன பண்றாங்க தெரியுமா..?

Spread the love

தமிழ் சினிமாவை பொருத்தவரையில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் அறிமுகமானாலும் ஒரு சிலர் மட்டுமே மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பார்கள். அப்படி ஒருவர்தான் நடிகை நீனா. நாயகன், கேளடி கண்மணி போன்ற படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். இதனை தொடர்ந்து 1994 ஆம் ஆண்டு வெளியான விடுகதை என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பெற்றார். இதனைத் தவிர அஜித் நடிப்பில் வெளியான ராசி மற்றும் விஜய் நடிப்பில் வெளியான காலமெல்லாம் காத்திருப்பேன் போன்ற திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

இவை அனைத்திற்கும் மேலாக கண்ணாத்தாள் திரைப்படம் மூலமாக இவர் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மனதிலும் நீங்காத இடம் பிடித்தார். இதில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த நிலையில் இவரை அடுத்த இடத்திற்கு கொண்டு சென்றது என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக பெண்கள் விரும்பும் ஒரு கதாபாத்திரமாக கண்ணாத்தாள் திரைப்படம் இருந்தது.

இருந்தாலும் சினிமாவில் தொடர்ச்சியான வாய்ப்புகள் வராததால் தொலைக்காட்சி சீரியல் பக்கம் தன்னுடைய கவனத்தை இவர் திருப்பினார். இதில் சித்தி மற்றும் அண்ணாமலை போன்ற தொடர்கள் ரசிகர்களிடம் சூப்பர் ஹிட் ஆனது. சினிமாவை தாண்டி மேலும் பலருக்கு நீனாவை அறியும் வகையில் இந்த சீரியல்கள் இருந்தன.

அதன் பிறகு சினிமா மற்றும் சின்னத்திரை ஆகியவற்றில் இருந்து படிப்படியாக இவர் விலக தொடங்கினார். பிறகு கடந்த 2004 ஆம் ஆண்டு இவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் அதன் பிறகு ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். தற்போது இவர் ஒட்டுமொத்தமாக சினிமாவில் இருந்து விலகி இருக்கும் நிலையில் இவர் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Nanthini

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

3 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

3 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

3 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

3 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

3 மணத்தியாலங்கள் ago