தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக 80 மற்றும் 90 காலகட்டத்தில் கொடி கட்டி பறந்தவர் தான் சிவகுமார். இவரைப் போலவே அவருடைய மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி என இருவருமே சினிமாவில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். சினிமாவிலயே ஆர்வம் இல்லாமல் இருந்த சூர்யா, வசந்த் கேட்டதால் நேருக்கு நேர் திரைப்படத்தில் அறிமுகமானார். தொடக்கத்தில் நடிக்க தடுமாறினாலும் அதன் பிறகு கௌதம் மேனன் மற்றும் பாலா போன்ற முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து தன்னை சூர்யா மெருகேற்றி கொண்டார். குறிப்பாக சிங்கம் திரைப்படத்தில் இவருடைய நடிப்பு பலரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் முதலில் சிவக்குமார் இவர்களின் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. சில வருடம் காத்திருந்து இருவரும் பெற்றோர் சம்பந்தத்தோடு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு சென்னை தி நகரில் உள்ள வீட்டில் பெற்றோருடன் வசித்து வந்த சூர்யா மூன்று அடுக்குக் கொண்ட அந்த வீட்டில் தனது அப்பா அம்மா மற்றும் தனது சகோதரர் கார்த்தி என அனைவரிடமும் இருந்து வந்தார். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு மனைவி ஜோதிகாவுக்காக மும்பையில் புது வீடு வாங்கி அங்கேயே குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார்.
இதனால் கார்த்தி தற்போது தனது பெற்றோருடன் வசித்து வருகின்றார். சூர்யாவும் ஜோதிகாவும் சென்னை வரும்போது கூட அப்பா அம்மா வீட்டிற்கு வராமல் நட்சத்திர ஹோட்டலில் தங்கி வந்தனர். இப்படியான நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சூர்யா ஒரு புதிய வீட்டை கட்டி வருகிறார். ஷூட்டிங்கில் கலந்து கொள்ள சென்னை வந்தால் இனிமேல் அவர் அந்த வீட்டில் தான் தங்குவார் என்று கூறப்படுகிறது. சூர்யாவுக்கு கங்குவா படம் தோல்வியடைந்த நிலையில் ரெட்ரோ படம் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…