நடிகை அனுயா பகவத் கடந்த 2007 ஆம் ஆண்டு மகேக் என்ற ஹிந்தி திரைப்படத்தில் ஆசிரியர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். இதனை தொடர்ந்து இவருக்கு தமிழ் திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி கடந்த 2009 ஆம் ஆண்டு சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் நடித்து சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார்.
இவரின் முதல் படத்திலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. அதன்படி 2009 ஆம் ஆண்டு மதுரை சம்பவம் என்ற திரைப்படத்தில் நடித்து தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியிருந்தார். தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு நகரம் என்ற திரைப்படத்தில் நடித்த இவருக்கு 2011 ஆம் ஆண்டு நஞ்சுபுரம் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். அதன் பிறகு தமிழில் வெளிவந்த பிக்பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் தமிழ் பேசத்தெரியாத ஒரே காரணத்தால் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் வாரமே எவிக்ஷன் மூலம் வெளியேற்றப்பட்டார். பின் இவர் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. பின்னர் தனியார் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தனது திரையுலக வாழ்க்கையிலிருந்து 2018 ஆம் ஆண்டோடு விலகினார். பின் எந்தவித திரையுலங்களிலும் தன்னை ஈடுப்படுத்திக்கொள்ளவில்லை.
2012 ஆம் ஆண்டு நண்பன் மற்றும் நான் படத்தில் நடித்திருந்த இவர் அதன் பிறகு நல்ல திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் திரைப்பட வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது அவர் சற்று குண்டாகி உடல் எடை அதிகரித்த நிலையில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். தற்போது அவருடைய லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதிமுகவில் உட்கட்சி பூசல் தற்போது பகிரங்க மோதலாக வெடித்திருக்கிறது. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர்…
கோயம்புத்தூர் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு…
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெறும் 47 இடங்களை மட்டும் பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட இழந்துள்ள நிலையில், அக்கட்சியில்…
தமிழக சட்டசபையில் இன்று எதிர்கட்சித் தலைவராகத் தனது கன்னிப் பேச்சைத் தொடங்கிய உதயநிதி ஸ்டாலின், ஆளும் தரப்பிற்கு வாழ்த்துக்களைக் கூறிய…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய், அதிமுகவின் மூத்த தலைவர்களான…
தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் போர்க்கொடி…