மீண்டும் பெண் குழந்தை வேண்டாம்.. கணவர் குடும்பத்தின் வற்புறுத்தலால் 2 வயது குழந்தையை கொன்று கர்ப்பிணி பெண் தற்கொலை.. பெரும் சோக சம்பவம்..!

Spread the love

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணத்தூர் அடுத்த கரிக்கவாம்பாடி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் என்ற விவசாயி. இவருக்கு உமாதேவி (25) என்ற மனைவியும் மேகனா ஸ்ரீ என்ற இரண்டு வயது மகளும் இருந்துள்ளனர். இப்படியான நிலையில் 4 மாத கர்ப்பிணி ஆக இருந்த உமாதேவியும் குழந்தை மேகனாவும் கடந்த 24ஆம் தேதி விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டன. தவறி விழுந்த குழந்தையை காப்பாற்ற முயன்றதில் இருவரும் பலியானதாக அப்போது கூறப்பட்டது. ஆனால் உமாதேவியின் தந்த ஏழுமலை தன்னுடைய மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து உமாதேவியின் கணவர் விக்னேஷ் மற்றும் மாமியார் சிவகாமி, மாமனார் ஜெயவேல் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது விக்னேஷ் மற்றும் உமாதேவி தம்பதிக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ள நிலையில் உமாதேவி மீண்டும் கர்ப்பமானதால் மீண்டும் பெண் குழந்தை பிறந்து விடுமோ என்ற அச்சத்தில் கருவில் உள்ளது ஆண் குழந்தையா அல்லது பெண்ணா என கண்டறிய முடிவு செய்தனர். இதற்காக ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு சென்று அங்குள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் உமாதேவிக்கு ஸ்கேன் செய்த நிலையில் கருவில் இருப்பது பெண் குழந்தை என தெரிய வந்தது.

இதனால் விக்னேஷ், மாமனார் ஜெயவேல் மற்றும் மாமியார் சிவகாமி ஆகியோர் உமாதேவியின் கருவை கலைக்க வற்புறுத்தியதால் அதே கிராமத்தை சேர்ந்த ஒரு நபரை அணுகி கருவை கலைக்க முயற்சி செய்தனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான உமாதேவி பெண் குழந்தையுடன் விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கருவை கலைக்க முயன்ற அதே ஊரை சேர்ந்த சாரதி என்ற பெண்ணையும் கைது செய்துள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“கொரோனாவை விட ஆபத்து”… 50% இறப்பு விகிதத்தைக் கொண்ட ஹண்டா வைரஸ்…. அதிர்ச்சியில் உலக நாடுகள்… நடுங்க வைக்கும் உண்மை…!

உலகம் பல்வேறு நுண்மித் தொற்றுகளைத் தொடர்ந்து எதிர்கொண்டு வரும் நிலையில், ஹண்டா வைரஸ் (Hantavirus) குறித்த விழிப்புணர்வு தற்பொழுது மீண்டும்…

16 minutes ago

BREAKING: அடுத்த ஷாக்… திமுக – அதிமுக கூட்டணி பேச்சு.. சற்றுமுன் திருமாவளவன் பரபரப்பு பேட்டி…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திமுக - அதிமுக கூட்டணி குறித்த விவகாரத்தில், விசிக தலைவர் திருமாவளவனின் சமீபத்திய…

20 minutes ago

“திமுக – அதிமுக கூட்டணி?”… ரகசியத்தை உடைத்த ஆர்.எஸ். பாரதி… அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதாகக் கூறப்படும் புகார்களை திமுக தலைமை கழகத்…

32 minutes ago

“தலை தப்பினால் போதும்னு தப்பி ஓடும்போது”… விஜய் பேச பேச விழுந்து விழுந்து சிரித்த சபாநாயகர்…. அப்படி என்ன நடந்தது…?

தமிழக சட்டசபையில் சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்ட ஜேசிடி பிரபாகரை, அவை முன்னவர் செங்கோட்டையனும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் கையைப்…

36 minutes ago

சட்டசபையில் அரங்கேறிய அதிசயம்… “நானும் விஜய்யும் ஒன்னா படிச்சவங்க”… உதயநிதி சொன்னதும் முதல்வர் செய்த ரியாக்ஷன்….!

தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற சபாநாயகர் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி…

42 minutes ago

விஜய் அமைச்சரவையில் அதிமுக அமைச்சர்கள்?… தமிழக அரசியலில் திடீர் பூகம்பம்… அந்த 4 பேர் யார்…?

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் களம் பெரும் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. புதிதாகக் களமிறங்கிய தமிழக வெற்றிக்…

50 minutes ago