“தவெகவிடம் வாலாட்டும் சி.வி.சண்முகம்”… அரை மணி நேரம்.. அந்த ரகசிய அறை… செந்தில் பாலாஜியுடன் என்ன பேசினீர்கள்?… வெடிக்கும் அதிமுக மோதல்…!

Spread the love

அதிமுகவில் உட்கட்சி பூசல் தற்போது பகிரங்க மோதலாக வெடித்திருக்கிறது. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் தலைமையில் ஒரு பிரிவினர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளிக்கப்போவதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேசி முடித்த பிறகு, கட்சி மரபுகளை மீறி எஸ்.பி. வேலுமணி பேசியது இந்தப் பிளவை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது. இன்று மதியம் 2 மணிக்கு இவர்கள் விஜய்யைச் சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ள நிலையில், அதிமுக தலைமை இவர்களைக் கடுமையாகச் சாடி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதிமுக வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், சொந்த மாவட்டத்தில் கூட வெற்றி பெறத் துப்பில்லாதவர்கள் எல்லாம் இணைந்து பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதாகக் காட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “திமுகவுடன் கூட்டணி என்று ஊடகங்களில் வரும் வதந்திகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதுதான் உங்கள் மாபெரும் திட்டமா?” என்று கேள்வி எழுப்பியுள்ள தலைமை, தவெகவிடம் மந்திரி பதவிக்காக இவர்கள் மண்டியிட்டுக் கிடப்பதாக வரும் செய்திகளையும் சுட்டிக்காட்டி எள்ளி நகையாடியுள்ளது. குறிப்பாக, “ஆளுங்கட்சி பக்கம் வாலாட்டப் போகிறோம்” என்று இவர்களே ஒப்புக்கொண்டதை அதிமுக தலைமை பலமாகச் சாடியுள்ளது.

இந்த அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ள மிக முக்கியமான கேள்வி, திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியுடனான இவர்களின் சந்திப்பு பற்றியதாகும். “நேற்று செந்தில் பாலாஜியோடு அரை மணி நேரம் தனியாக என்ன பேசினீர்கள் என்பதைத் தெளிவுபடுத்துவீர்களா?” என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது. எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் கூட்டணி பேசினார் என்று சி.வி. சண்முகம் குற்றம் சாட்டிய நிலையில், இவர்களே திமுக அமைச்சரைச் சந்தித்திருப்பது இவர்கள் மீது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தலைமை கருதுகிறது. இது துரோகத்தின் உச்சம் என அதிமுக விமர்சித்துள்ளது.

கட்சியின் வளர்ச்சி மற்றும் வாக்கு வங்கி குறித்துப் பேசியுள்ள தலைமை, கடந்த தேர்தலில் விழுந்த 1.34 கோடிக்கும் அதிகமான வாக்குகள் இரட்டை இலை சின்னத்திற்காகவும், ‘எடப்பாடியார்’ என்ற மக்களின் முதல்வருக்காகவும் விழுந்தவை என்பதை நினைவூட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமி போட்ட பிச்சையில் எம்.எல்.ஏ-க்களாக வெற்றி பெற்றுவிட்டு, இப்போது உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்வதாகவும், பாஜக, பாமக, அமமுக போன்ற கூட்டணிக் கட்சிகளையும் தொண்டர்களையும் இவர்கள் கைகழுவி விட்டதாகவும் அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. இவர்களின் அதிகாரத் திமிரையும், பண்ணையார்தனத்தையும் தொண்டர்கள் இனியும் பொறுக்க மாட்டார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக, அதிமுக என்பது ஒரு சில சட்டமன்ற உறுப்பினர்களின் இயக்கம் அல்ல, அது லட்சக்கணக்கான தொண்டர்களின் இயக்கம் என்பதைத் தலைமை அழுத்திச் சொல்லியுள்ளது. “எடப்பாடியாரால் தான் தொண்டர்கள், எடப்பாடியாருக்காகத் தான் தொண்டர்கள்” என்று குறிப்பிட்டுள்ளதோடு, இந்த இயக்கத்திற்கு நெருக்கடி வரும்போதெல்லாம் தொண்டர்களே சரியான முடிவை எடுத்துள்ளார்கள் என்றும், இப்போதும் துரோகிகளுக்கு எதிராகத் தொண்டர்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த மோதலால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Nanthini

Recent Posts

“கொரோனாவை விட ஆபத்து”… 50% இறப்பு விகிதத்தைக் கொண்ட ஹண்டா வைரஸ்…. அதிர்ச்சியில் உலக நாடுகள்… நடுங்க வைக்கும் உண்மை…!

உலகம் பல்வேறு நுண்மித் தொற்றுகளைத் தொடர்ந்து எதிர்கொண்டு வரும் நிலையில், ஹண்டா வைரஸ் (Hantavirus) குறித்த விழிப்புணர்வு தற்பொழுது மீண்டும்…

16 minutes ago

BREAKING: அடுத்த ஷாக்… திமுக – அதிமுக கூட்டணி பேச்சு.. சற்றுமுன் திருமாவளவன் பரபரப்பு பேட்டி…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திமுக - அதிமுக கூட்டணி குறித்த விவகாரத்தில், விசிக தலைவர் திருமாவளவனின் சமீபத்திய…

20 minutes ago

“திமுக – அதிமுக கூட்டணி?”… ரகசியத்தை உடைத்த ஆர்.எஸ். பாரதி… அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதாகக் கூறப்படும் புகார்களை திமுக தலைமை கழகத்…

32 minutes ago

“தலை தப்பினால் போதும்னு தப்பி ஓடும்போது”… விஜய் பேச பேச விழுந்து விழுந்து சிரித்த சபாநாயகர்…. அப்படி என்ன நடந்தது…?

தமிழக சட்டசபையில் சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்ட ஜேசிடி பிரபாகரை, அவை முன்னவர் செங்கோட்டையனும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் கையைப்…

36 minutes ago

சட்டசபையில் அரங்கேறிய அதிசயம்… “நானும் விஜய்யும் ஒன்னா படிச்சவங்க”… உதயநிதி சொன்னதும் முதல்வர் செய்த ரியாக்ஷன்….!

தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற சபாநாயகர் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி…

42 minutes ago

விஜய் அமைச்சரவையில் அதிமுக அமைச்சர்கள்?… தமிழக அரசியலில் திடீர் பூகம்பம்… அந்த 4 பேர் யார்…?

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் களம் பெரும் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. புதிதாகக் களமிறங்கிய தமிழக வெற்றிக்…

51 minutes ago