தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைத்துள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டதால் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அதிமுகவின் வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள் 25 பேரும், அமமுக எம்எல்ஏ ஒருவரும் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தவெகவை கடுமையாக விமர்சித்தார். கடந்த 2006-ல் திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத போது காங்கிரஸ் உடனான புரிதலால் ஆட்சி நடந்தது என்றும், ஆனால் தற்போது தவெகவை எதிர்த்துப் போட்டியிட்டு வென்ற காங்கிரஸும், திமுக கூட்டணியில் இருக்கும் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தவெக ஆட்சியை வெளியில் இருந்து ஆதரிப்பது ஏன் என்று புரியவில்லை என்றும் சாடினார். மேலும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலமாகவே ஆட்சியை நடத்திவிடலாம் என தவெக நினைப்பதாகக் குற்றம் சாட்டினார்.
அதிமுக என்ற பேரியக்கத்தையும் அதன் தொண்டர்களையும் அழிக்க தவெக முயற்சிப்பதாகவும், அதற்கு ஏஜென்டாக செங்கோட்டையன் செயல்படுவதாகவும் தினகரன் சாடினார். அரசியல் கட்சித் தலைமைக்கே கொறடாவை நியமிக்கும் அதிகாரம் உள்ளது என நீதிமன்றத் தீர்ப்புகள் சுட்டிக்காட்டுவதை நினைவு கூர்ந்த அவர், அமமுக மற்றும் அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் சிபிஐ விசாரணை கோருவது உள்ளிட்ட கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்தார். இறுதியாக, அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்றும், ‘சரியான அதிமுக’வை மட்டுமே அமமுக ஆதரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…
ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…
தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…
தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…
உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…
கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…