#image_title
நவரச நாயகன் கார்த்திக் அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் ஹீரோவாக அறிமுகமானார். பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தவர் கார்த்திக். அவரது கிண்டலான பேச்சு, நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கார்த்திக் நடித்த அலைகள் ஓய்வதில்லை என்ற முதல் படமே அவருக்கு பெரிய வெற்றி படமாக அமைந்தது.
இதனையடுத்து வாலிபமே வா வா, கேள்வி நானே பதிலும் நானே, பக்கத்து வீட்டு ரோஜா, ஆகாய கங்கை, அதிசய பிறவிகள், அபூர்வ சகோதரிகள், மௌன ராகம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் கார்த்திக் நடித்தார். நடிகர் கார்த்திக்கை பொறுத்தவரை பெரும்பாலும் அவர் ஷூட்டிங்கிற்கு தாமதமாக தான் வருவார் என்ற புகார் உள்ளது.
அவரை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்றால் இயக்குனர்கள் மிகவும் சிரமப்படுவார்கள். ஆனால் இயக்குனர் சுந்தர். சி மட்டும் கார்த்திக்கை வைத்து எப்படி படம் எடுத்துள்ளார் என்ற கேள்வி எழுந்தது. இது பற்றி ஒரு பேட்டியில் பேசிய சித்ரா லட்சுமணன் கூறியிருப்பதாவது, கார்த்திக் படப்பிடிப்பிற்கு தாமதமாக வருவது நிஜம்தான். அவரை வைத்து சுந்தர்.சி, செல்வா ஆகியோர் ஏராளமான படங்களை இயக்கியுள்ளார்.
கார்த்திக் தாமதமாக வருவதால் சுந்தர் சி காலையிலேயே படபிடிப்புக்கு சென்று கார்த்திக் சம்பந்தமில்லாத காட்சிகளை எடுத்து முடித்து விடுவாராம். பின்னர் கார்த்திக் வந்ததும் அவர் தொடர்பான காட்சிகளை எடுப்பார்களாம் இப்படித்தான் சுந்தர் சி கார்த்திக்கை வைத்து ஏராளமான படங்களை இயக்கியுள்ளார் என சித்திரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…