ஷூட்டிங்க்கு லேட்டாக வந்தும் கார்த்திக்கை வைத்து பல படங்களை இயக்கிய சுந்தர்.சி & செல்வா.. எப்படி தெரியுமா?

By Priya Ram on ஏப்ரல் 3, 2024

Spread the love

நவரச நாயகன் கார்த்திக் அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் ஹீரோவாக அறிமுகமானார். பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தவர் கார்த்திக். அவரது கிண்டலான பேச்சு, நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கார்த்திக் நடித்த அலைகள் ஓய்வதில்லை என்ற முதல் படமே அவருக்கு பெரிய வெற்றி படமாக அமைந்தது.

   

இதனையடுத்து வாலிபமே வா வா, கேள்வி நானே பதிலும் நானே, பக்கத்து வீட்டு ரோஜா, ஆகாய கங்கை, அதிசய பிறவிகள், அபூர்வ சகோதரிகள், மௌன ராகம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் கார்த்திக் நடித்தார். நடிகர் கார்த்திக்கை பொறுத்தவரை பெரும்பாலும் அவர் ஷூட்டிங்கிற்கு தாமதமாக தான் வருவார் என்ற புகார் உள்ளது.

   

 

அவரை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்றால் இயக்குனர்கள் மிகவும் சிரமப்படுவார்கள். ஆனால் இயக்குனர் சுந்தர். சி மட்டும் கார்த்திக்கை வைத்து எப்படி படம் எடுத்துள்ளார் என்ற கேள்வி எழுந்தது. இது பற்றி ஒரு பேட்டியில் பேசிய சித்ரா லட்சுமணன் கூறியிருப்பதாவது, கார்த்திக் படப்பிடிப்பிற்கு தாமதமாக வருவது நிஜம்தான். அவரை வைத்து சுந்தர்.சி, செல்வா ஆகியோர்  ஏராளமான படங்களை இயக்கியுள்ளார்.

கார்த்திக் தாமதமாக வருவதால் சுந்தர் சி காலையிலேயே படபிடிப்புக்கு சென்று கார்த்திக் சம்பந்தமில்லாத காட்சிகளை எடுத்து முடித்து விடுவாராம். பின்னர் கார்த்திக் வந்ததும் அவர் தொடர்பான காட்சிகளை எடுப்பார்களாம் இப்படித்தான் சுந்தர் சி கார்த்திக்கை வைத்து ஏராளமான படங்களை இயக்கியுள்ளார் என சித்திரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.