Categories: INSPIRATION

அன்று : சூப்பர்சிங்கர் போக வீட்டில் தடை ; இன்று : சூப்பர் சிங்கர் டைட்டில் வென்ற முதல் பெண்…… யார் இந்த சூப்பர் சிங்கர் அருணா

சூப்பர் சிங்கர் டைட்டிலை வென்ற முதல் பெண் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் அருணா. தன் குரலால் அனைவரையும் கட்டிப்போட்ட தேன் குரல் இவருடையது. எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சூப்பர் சிங்கர் வந்து, அழகாக பாடி டைட்டிலை அலேக்காக தூக்கினார் அருணா. ஆனால் இவரின் பயணம் எளிதானது அல்ல. இதன் பின்னால் பல வருட உழைப்பு உள்ளது.

Super singer aruna

இவரின் வாழ்க்கை குறித்து, இவரே பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், நான் ஒரு சின்ன கிராமத்தில் பிறந்தேன், பெரிதாக வருமானமும் இல்லாத குடும்பம். டிவியில் சூப்பர்சிங்கர் பார்த்து நம் பேத்திகளும் இப்படி வரணும் என என் பாட்டி தான் எங்களை பாட்டு கிளாஸ் சேர்த்து விட்டார். அங்கு சென்று நாங்கள் பாட்டு கற்றுகொள்ளளவே இல்லை. நாங்கள் சும்மா இருப்போம், ஆனால் சில வருடங்களில் பாட்டு கற்றுக்கொள்ள ஆரம்பித்தோம் நானும் என் தங்கையும்.

Super singer aruna

நாங்கள் காலேஜ் படிப்பே இசை குறித்து படிக்க ஆசைப்பட்டோம், ஆனால் அம்மா ஒத்துக்கொள்ளவில்லை. சூப்பர்சிங்கரில் வாய்ப்பு கிடைத்தபோது வீட்டில் ஒரே ரணகளம் தான். எங்கள் அப்பா நீ போகக்கூடாது என சண்டையிட ஆரம்பித்து விட்டார். ஆனால் என் மாமா குடும்பத்தார் தான் என் அப்பாவை சமாதானப்படுத்தி என்னை அனுப்பி வைத்தார்கள்.

Aruna won supersinger title

அதற்கு முன்பு வரை சினிமா பாட்டே பாடியது இல்லை, அதன்பின் தான் கற்றுக்கொண்டேன். சூப்பர்சிங்கரில் உள்ள இசை குழு உதவியாக இருந்தார்கள். இரவு முழுவது சங்கதி, ஸ்வரங்கள் சரியாக வரும் வரை இரவெல்லாம் பாடுவேன். ஒரு எபிசொடுக்காக அவ்வளவு கஷ்டப்படுவோம். ஆனால் டைட்டில் ஜெயித்ததும் அந்த கஷ்டமெல்லாம் மறந்து போனது என கூறியுள்ளார். உயர பறக்க கனவு கண்டனம் மட்டும் போதாது அதற்காக கஷ்டப்பட வேண்டும். சோதனைகளுக்கு பின்பே சாதனை வரும் என்பதை அருணா உணர்த்தியுள்ளார்.

Deepika
Deepika

Recent Posts

அடக்கடவுளே..! என்னப்பா ஆச்சு இவருக்கு.. நடக்க முடியாமல் நடந்து வந்த சாமி பட வில்லன்.. வைரலாகும் வீடியோ..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் கோட்டா சீனிவாச ராவ். பிரபல தெலுங்கு…

32 mins ago

படத்தை பார்த்துவிட்டு தியேட்டரை சுத்தம் செய்யும் பெண் என் கன்னத்தை பிடித்து.. ‘ஸ்டார்’ பட இயக்குனர் இளன் வெளியிட்ட பதிவு..!

பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தை இயக்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற இயக்குனர் இளன் இயக்கத்தில் உருவான…

1 hour ago

கொடுத்த பில்டப் அளவுக்கு கலெக்ஷன் ஒன்னும் வொர்த் இல்லையே.. கவினின் ‘ஸ்டார்’ மூன்று நாளில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா..?

நடிகர் கவின் நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியான ஸ்டார் திரைப்படத்தின் மூன்று நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.…

2 hours ago

பீச்சோரமாக மார்டன் உடையில்.. ஹாயாக வளம் வரும் மகாநதி சீரியல் நடிகை ராகினி.. லேட்டஸ்ட் பிக்ஸ்..!

மகாநதி சீரியலில் ராகினி என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகை சாதிகாவின் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகின்றது. மகாநதி சீரியலில்…

2 hours ago

‘அயலி’ படத்தில் நடித்த சிறுமியா இது..? என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..!

அயலி திரைப்படத்தில் தமிழ்ச்செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய அபிநட்சத்திரா வெளியிட்ட புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில்…

3 hours ago

தெலுங்கு படத்தில் நடிப்பது ரொம்பவே கஷ்டம்.. தான் அனுபவித்த வேதனைகள் குறித்து மனம் திறந்து பேசிய வாத்தி பட நடிகை..!!

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சம்யுக்தா மேனன். சம்யுக்தா மேனன் தமிழில் களரி திரைப்படத்தின் மூலம் என்ட்ரி…

3 hours ago