ஒன்றுமே தெரியாதது போல் பாவனை செய்கிறார் முதலமைச்சர்.. எல்பிஜி விவகாரத்தில் சுந்தர்.சி கடும் சாடல்..!!

Spread the love

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மதுரை மத்திய தொகுதி வேட்பாளரும் இயக்குநருமான சுந்தர்.சி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எல்பிஜி (LPG) எரிவாயு விலை உயர்வு குறித்துப் பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் கேள்வி எழுப்புவதைச் சுட்டிக்காட்டியுள்ளார். “நமது பிரதமர் மோடியிடம் எரிவாயு எங்கே என்று ஒரு முதலமைச்சர் கேட்கிறார்; இதுகுறித்து அவருக்கு எதுவுமே தெரியாதது போல் பாவனை செய்கிறார்” என்று சுந்தர்.சி தனது பதிவில் கடுமையாகச் சாடியுள்ளார்.

மேலும், எல்பிஜி என்பது பிரதமர் மோடியின் தனிப்பட்ட கருவூலம் அல்ல என்பதை முதலமைச்சர் உணர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது மேற்கு ஆசிய நாடுகளில் போர் உச்சத்தில் இருப்பதால், எரிவாயு விநியோகம் மற்றும் விலை தொடர்பான சிக்கல்கள் உலகம் முழுவதும் நிலவி வரும் ஒரு சர்வதேசப் பிரச்சினை என்று சுந்தர்.சி விளக்கமளித்துள்ளார். உலகளாவிய பொருளாதாரச் சூழலை மறைத்துவிட்டு, அரசியல் லாபத்திற்காகப் பிரதமரைக் குறை கூறுவது முறையல்ல என்ற தொனியில் அவரது கருத்துக்கள் மதுரை அரசியல் வட்டாரத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

Soundarya

Recent Posts

தர்பூசணியா? இல்லை விஷமா? வெட்டும்போது பொங்கிய வெள்ளை நுரை .. இணையத்தை அதிர வைக்கும் பகீர் வீடியோ..!

பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…

3 மணத்தியாலங்கள் ago

பகீர்… மஞ்சள் நீராட்டு விழாவில் நேர்ந்த விபரீதம்.. முகத்தில் பூசிய மஞ்சளால் வீங்கிய உதடுகள் – கண்ணீரில் மணப்பெண்..

மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…

3 மணத்தியாலங்கள் ago

வாழ்வா? சாவா? நொடிக் கணத்தில் தப்பிய உயிர்.. ராஜநாகத்துடன் நேருக்கு நேர் மோதிய நாய் – இணையத்தை அதிர வைக்கும் பகீர் காட்சி..!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…

3 மணத்தியாலங்கள் ago

பகீர்… டெலிவரி பாய் வேடத்தில் வந்த கொள்ளையன்.. கோயில் வளாகத்திலேயே கைவரிசை – சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…

4 மணத்தியாலங்கள் ago

சச்சினையே சொக்க வைத்த குட்டி இன்ஜினியர்… திறமைக்குத் தடை ஏது?.. கார் தயாரித்த கிராமத்துச் சிறுவன்.. வைரலாகும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…

4 மணத்தியாலங்கள் ago

தந்தையே எமனாக மாறிய அவலம்!” – மகனைத் தீர்த்துக்கட்டிவிட்டு தானும் முடித்துக் கொண்ட தந்தை; ஒரு நொடி ஆத்திரத்தால் சிதைந்த குடும்பம்.!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…

4 மணத்தியாலங்கள் ago