என்னடா பண்ற அங்க..? திடீரென காஜல் அகர்வாலின் அந்த இடத்தை தொட்டு செல்பி எடுத்த ரசிகர்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…

By Begam

Published on:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்  வந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யாவுடன் இணைந்து இவர் நடித்த பல்வேறு படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.

   

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். சினிமாவில் பிசியாக இருந்த இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு மற்ற நடிகைகளை போலவே திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து திடீரென விலகினார் காஜல் அகர்வால்.இவருக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் தற்போது காஜல் அகர்வால் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

சமீபத்தில் காஜல் அகர்வால் பேஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது ஒரு நபர், காஜல் அகர்வாலை கட்டிப்பிடித்து போட்டோ எடுக்க முயன்றார். கடுப்பான காஜல் அங்கு முறைத்த படி நின்றார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் வேகமாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ..