‘எந்திரன்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது ரஜினிகாந்த்-ஐஸ்வர்யா ராய் இல்லையாம்.. சங்கர் தேர்வு செய்தது இவங்கள தானாம்..!

By Mahalakshmi on மே 4, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை பெற்றவர் ஷங்கர். 2010 ஆம் ஆண்டு இவர் இயக்கிய திரைப்படம் எந்திரன். இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் சயின்டிஸ்ட்டாக நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருப்பார்கள். அது மட்டும் இல்லாமல் சந்தானம், கருணா உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருந்தார்கள்.

   

இந்திய சினிமாவில் மிக பிரமாண்டமான செலவில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமை எந்திரன் படத்தையே சேரும். இயக்குனர் சங்கர் இந்த திரைப்படத்தை 2000 ஆண்டு தொடக்கத்தில் எடுக்க முடிவு செய்திருந்தார். அப்போது இந்த படத்தில் நடிகர் கமலஹாசன் மற்றும் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவை நடிக்க தேர்வு செய்தாராம். இது தொடர்பான போட்டோ சூட் கூட அவர் எடுத்திருக்கின்றார்.

   

 

ஆனால் கமலின் கால்ஷீட் பிரச்சினை காரணமாக இந்த திரைப்படம் கைவிடப்பட்டது. மீண்டும் 2007 ஆம் ஆண்டு எந்திரன் படத்தில் ஹீரோவாக நடிகர் ஷாருகானையும் பிரியங்கா சோப்ராவையும் நடிக்க தேர்வு செய்தாராம். ஆனால் ஸ்கிரிப்ட் பிரச்சினை காரணமாக ஷாருக்கான் அந்த படத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.

 

அதன் பின் எந்திரன் திரைப்படத்தின் நடிப்பதற்கு ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் தேர்வு செய்து இயக்கினாராம் சங்கர். இந்நிலையில் கமலஹாசன் மற்றும் பிரீத்தி ஜிந்தா வைத்து சங்கர் எடுத்த போட்டோ ஷூட் தற்போது வைரலாகி வருகின்றது.