கடலூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) வேட்பாளர் ராஜ்குமாரின் உறவினர் புகழேந்திக்கு சொந்தமான பேக்கரி மற்றும் வீடுகளில், வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர். பணப்பட்டுவாடா புகாரின் அடிப்படையில் சென்னையில் இருந்து வந்த அதிகாரிகள், நேற்று முன்தினம் மாலை தொடங்கி நேற்று அதிகாலை வரை இந்தச் சோதனையை மேற்கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த தவெகவினர் கட்சி அலுவலகம் மற்றும் வருமான வரித்துறை அலுவலகம் முன்பு திரண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இரண்டாவது நாளாக நீடித்த இந்தச் சோதனையில், புகழேந்தியின் வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ.12 லட்சம் ரொக்கம், பல லட்ச ரூபாய் மதிப்பிலான வங்கி ஆவணங்கள் மற்றும் முக்கிய கோப்புகளை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது. விசாரணையை முன்னிட்டு புகழேந்தி போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். இந்தச் சோதனையின் எதிரொலியாக, கடலூர் மாவட்டத்தில் நடிகர் விஜய் மேற்கொள்ளவிருந்த தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது சமூக ஊடகங்களில் ஒரு குடும்பத்தினர் இரவு உணவு சாப்பிடும் போது எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.…
"அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்து, தற்கொலை செய்துகொண்ட அக்காட்சி நிர்வாகி மகேந்திரனின் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர்…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் மேற்கொள்ளும் கள ஆய்வு நிகழ்வுகளை, சமூக ஊடகங்களில்…
லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினரின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, இஸ்ரேல் பிரதமர்…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த நீட்டிப்பு மற்றும் அமைதி உடன்பாட்டை எட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில்…
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நேரில்…