“டேய் உன்ன ஜெயிலுக்கு அனுப்பிடுவேன் பாத்துக்கோ”… 9 ஆம் வகுப்பு மாணவனை மிரட்டிய ஆசிரியை… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

கேரள மாநிலம் பாலக்காடு மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலக்காடு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் அர்ஜுன் என்ற மாணவன் இன்ஸ்டாகிராமில் ஆட்சேபனைக்குரிய செய்தி ஒன்றை அனுப்பியதற்காக வகுப்பு ஆசிரியை ஆஷா மாணவனை அழைத்து, சைபர் செல்லில் புகார் அளித்து, ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று தருவேன் என்று மனரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

இதனால் பயந்து போன மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான். ஆசிரியர் மிரட்டியது தான் மாணவனின் தற்கொலைக்கு காரணம் என்று குடும்பத்தினரும் சக மாணவர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஆசிரியை மாணவனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மாணவர்கள் மற்றும் பெற்றோரின் போராட்டத்தை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் 2 ஆசிரியர்களை இடைநீக்கம் செய்து உள்ளது.

சமூக ஊடகப் பயன்பாடு குறித்து சாதாரண எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டதாகவும் வேறு பள்ளிக்கு மாறுவது குறித்த முடிவால் மாணவன் மன வருத்தத்தில் இருந்ததாகவும் பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். அர்ஜுனின் குடும்பத்தினர் ஆசிரியை மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது

Nanthini

Recent Posts

“44 வயதில் நேர்ந்த கொடூரம்”… திரையுலகை உலுக்கிய பிரபல நடிகரின் திடீர் மரணம்… பின்னணியில் இருந்த அதிர்ச்சி காரணம்…!

சின்னத்திரை மற்றும் சினிமா உலகில் சமீப காலமாக இளம் வயது பிரபலங்களின் மரணங்கள் தொடர்கதையாகி வருவது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை…

2 minutes ago

தங்கத்திற்கு பணம்.. சற்றுமுன் அரசு அறிவித்தது…. மோடி அரசு எடுக்கப்போகும் அந்த ‘அதிரடி’ முடிவு….!

வீடுகளில் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தும் நோக்கில், 'தங்கத்தை பணமாக்கும் திட்டத்தை' முழுவீச்சில்…

3 minutes ago

அதிமுகவுக்கு ‘செக்’ வைத்த விஜய்…. தவெகவின் ரகசிய ‘ஆபரேஷன் 2026’.. பின்னணியில் இருக்கும் அந்த ஒரு கணக்கு… தமிழக அரசியலை அதிரவைக்கும் ‘ஆள் தூக்கும்’ அரசியல்….!

தமிழக அரசியலில் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியிருப்பது, தமிழக வெற்றிக் கழகம் மேற்கொண்டு வரும் 'ஆள் தூக்கும்' அரசியல்…

9 minutes ago

“திமுக – அதிமுக ரகசிய டீல்?… தவெக-வை வீழ்த்த ஒன்றுசேர்கிறதா திராவிடக் கோட்டைகள்?”…. பின்னணி அம்பலம்…. அதிர்ச்சியில் அறிவாலயம்….!

2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து, தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத…

15 minutes ago

“உன்ன மாதிரி 1000 புருஷனை நான் வச்சுக்குவேன்”…. மனைவியின் அந்த ஒரு பேச்சு… அடுத்த நொடியே கணவர் செய்த கொடூரம்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்….!

மத்தியப் பிரதேச மாநிலம் சின்வாரா மாவட்டத்தில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதம், ஒரு குடும்பத்தையே சிதைத்து நீதிமன்றத் தீர்ப்பு வரை…

26 minutes ago

BREAKING: தவெகவில் ஓபிஎஸ்?…. முடிவை மாற்றினார்…. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்….!

தமிழக அரசியல் களத்தில் தற்போது ஒரு புதிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஇஅதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வர்…

34 minutes ago