சென்னை மாவட்டம் மயிலாப்பூரைச் சேர்ந்த அரவிந்த் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் இசை கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கு டேட்டிங் செயலி அறிமுகமான ஒரு பெண் இரவு 12 மணிக்கு மேல் மயிலாப்பூர் வடக்கு மாடவீதிக்கு அருகே வந்தால் இன்ப பரிசு தருகிறேன் என கூறியுள்ளார். இதனால் அந்த வாலிபரும் இரவு யாருக்கும் தெரியாமல் அங்கு சென்றபோது அதிர்ச்சி காத்திருந்தது.
ஏற்கனவே அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்கள் அரவிந்தை இழுத்துச் சென்று சரமாரியாக தாக்கி பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதனால் அரவிந்த் ஜிபே மூலம் அவர்களுக்கு 1300 ரூபாய் அனுப்பி வைத்துள்ளார். மேலும் அரவிந்தை ஆபாசமாக வீடியோ எடுத்து இதை வெளியே கூறினால் சோசியல் மீடியாவில் வீடியோவை வெளியிடுவோம் என மிரட்டி உள்ளனர்.
அவர்களிடம் இருந்து தப்பித்து வந்த அரவிந்த் தைரியமாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் மாங்கொல்லை கார்டன் பகுதியைச் சேர்ந்த அஜய், சூர்யா ஆகிய இரண்டு பேர் அரவிந்த்தை ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்தது. இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அதிமுகவில் நாளுக்கு நாள் உட்கட்சிப் பூசல்களும் நிர்வாகிகளின் வெளியேற்றமும் அதிகரித்துக் கொண்டே செல்வது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
தமிழ்நாடு அரசியலில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்துக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையேயான மோதல் தற்போது சட்டமன்றத்தைத் தாண்டி சமூக வலைதளங்களில்…
கேரள மாநிலம் திருச்சூர் வெளியன்னூரில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில், ஜோதி (30) என்ற பெண் மற்றும் அவரது பச்சிளம்…
அதிமுகவில் திடீர் திருப்பமாக, கட்சியின் முக்கிய மூத்த தலைவர்கள் தங்களது பொறுப்புகளை ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த ஜூன் 17-ம் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி…
மெட்ரோ இரயிலில் பயணம் செய்த பெண் ஒருவர், 'How to Kill Men' (ஆண்களை எப்படிக் கொலை செய்வது) என்ற…