“அவங்க மேல ஆக்சன் எடுங்க.. இல்லனா கூட்டணி இல்ல”…. ராகுல் காந்திக்கு ஸ்டாலின் அனுப்பிய அல்டிமேட்டம்… தமிழக அரசியலில் மெகா டுவிஸ்ட்….!

Spread the love

திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான பல ஆண்டுகால “கிச்சன் கேபினட்” நட்பு தற்போது பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு மற்றும் ஆட்சியில் பங்கு போன்ற கோரிக்கைகளால் இரு கட்சிகளுக்கும் இடையே இழுபறி நீடித்து வருகிறது. குறிப்பாக, காங்கிரஸ் நிர்வாகிகள் மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோரின் தொடர்ச்சியான விமர்சனங்கள் திமுக தலைமைக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி முடிவு தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

கூட்டணி தர்மத்தை மீறி தனிநபர் விமர்சனங்களை முன்வைக்கும் அந்த இரு நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கும் என திமுக தரப்பிலிருந்து ராகுல் காந்திக்கு ரகசிய செய்தி அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சமீபத்திய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பேசும்போது திமுக எம்பிக்கள் அவையில் இல்லாதது, காங்கிரஸிற்கு விடுக்கப்பட்ட ஒரு மென்மையான எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. திமுகவின் இந்த நிபந்தனைக்கு டெல்லி மேலிடம் இன்னும் வெளிப்படையான பதிலை அளிக்கவில்லை.

மறுபுறம், ஒருவேளை திமுகவுடனான உறவு முறிந்தால், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் கைகோர்ப்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. விஜய் கட்சிக்கு இருக்கும் இளைஞர் மற்றும் ரசிகர் பட்டாளம் காங்கிரஸின் தேசிய அரசியலுக்கு வலுசேர்க்கும் என ஒரு தரப்பினர் கணக்குப்போடுகிறார்கள். விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தால், அது திமுகவின் வாக்கு வங்கியில் சரிவை ஏற்படுத்துவதுடன் சிறுபான்மையின வாக்குகளிலும் பிளவை உண்டாக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

தற்போது நிலவும் சூழலில், ராகுல் காந்தி தனது கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்து ஸ்டாலினை சமாதானப்படுத்துவாரா அல்லது தவெக போன்ற புதிய சக்திகளுடன் கைகோர்த்து புதிய பாதையில் பயணிப்பாரா என்பதே மில்லியின் டாலர் கேள்வியாக உள்ளது. திமுக தனது ஆளுமையைத் தக்கவைக்க முயற்சிக்கும் நிலையில், காங்கிரஸ் தனது உரிமைகளுக்காகப் பிடிவாதம் காட்டுவது தமிழக அரசியல் வானில் ஒரு பெரும் புயல் வீசத் தயாராகிக் கொண்டிருப்பதையே காட்டுகிறது. இதில் எடுக்கப்படும் முடிவே தமிழகத்தின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளைத் தீர்மானிக்கும்.

Nanthini

Recent Posts

குஷியோ குஷி தமிழகம் முழுவதும் அடுத்த 3 மாதங்களில்… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!

தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், அடுத்த 3 மாதங்களுக்குள் புதிதாக 2,000 மின்சார ஏசி பஸ்களை…

3 minutes ago

4 மாசமா யாருக்குமே தெரியல… பர்தாவுக்குள் ஒளிந்திருந்த பகீர் உண்மை… 50 சவரன் நகையை நைசாக சுருட்டிய ‘நவநாகரீக’ பெண்… சென்னையில் அடுத்தடுத்து நடந்த அதிரடி கைதுகள்…!

சென்னை வியாசர்பாடியில் உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த நான்கு மாதங்களாக வாடிக்கையாளர் போல பர்தா அணிந்து வந்து, ஊழியர்களின்…

13 minutes ago

“உன் கழுத்தை அறுத்துடுவேன்டா”…பள்ளி சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை… சிக்கிய 3 காமுகர்கள்… நீதிமன்ற வளாகத்தில் ஆவேசமடைந்த தந்தை… கதிகலங்கி நின்ற போக்சோ கைதி…!

விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு எதிராக அரங்கேறிய அடுத்தடுத்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக, கடந்த சனிக்கிழமை (ஜூலை 04) ஒரே நாளில்…

52 minutes ago