அதிமுக வெறும் முகமூடி தான்… எடப்பாடி டெல்லியின் கட்டுப்பாட்டில் உள்ளார்… பரபரப்பை கிளப்பிய ஸ்டாலின்..!!

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சிவகங்கை மாவட்டம் வையிரவன்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், நான்கு தொகுதி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி தோல்வி பயத்திலும் விரக்தியிலும் திமுகவை விமர்சித்து வருவதாகக் குறிப்பிட்டார். பின்னர் அவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்குச் சென்று அங்குள்ள தனியார் விடுதியில் தங்கி ஓய்வெடுத்தார்.

பரமக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்துக் கேட்டபோது, தான் இன்னும் அவற்றைப் படிக்கவில்லை என்று பதிலளித்தார். மேலும், ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்தது குறித்த கேள்விக்கு கருத்து தெரிவிக்க விரும்பவில்லை (No Comments) என்று அவர் சுருக்கமாகக் கூறினார்.

முன்பெல்லாம் திமுக – அதிமுக இடையேதான் போட்டி இருந்தது, இப்போது ஏன் தமிழ்நாடு மற்றும் டெல்லிக்கு இடையிலான போட்டி என்று கூறுகிறீர்கள் என்ற கேள்விக்கு அவர் விரிவான விளக்கமளித்தார். தற்போது அதிமுகவிற்கு முறையான தலைமை இல்லை என்றும், அக்கட்சி பாஜகவின் கட்டுப்பாட்டில் இயங்குவதாகவும் அவர் விமர்சித்தார். அதிமுக என்ற முகமூடியுடன் பாஜக தமிழ்நாட்டிற்குள் நுழைய முயற்சிப்பதால், இது தமிழ்நாட்டின் உரிமைக்கும் டெல்லிக்கும் இடையிலான போராட்டமாக மாறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Soundarya

Recent Posts

பங்காளிகளின் வெறிச்செயல்..! நிலத்துக்காகப் பிறந்த உடன்பிறப்புகளைத் தீர்த்துக்கட்டிய உறவினர்கள்.. தருமபுரியை உலுக்கிய இரட்டைக் கொலை..!!

தருமபுரி அருகே தகடூர் நகரில் சொத்து தகராறு காரணமாக அக்கா மற்றும் தம்பி ஆகிய இருவர் கழுத்தறுத்து மிகக் கொடூரமான…

1 minute ago

25 வயதிலேயே மாரடைப்பா?… ‘ஈஸ்ட்ரோஜன்’ தீர்ந்ததும் பெண்களுக்கு வரும் ஆபத்து… திடீரென மாரடைப்பு ஏற்பட்டால் பதறாமல் முதலில் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்…!

மாரடைப்பு என்பது உலக அளவில் மனித உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு நோயாகும். இதய தசைகளுக்கு ரத்தத்தைக் கொண்டு…

9 minutes ago

“இது பொய்யாக இருக்கக்கூடாதா..?” இயக்குநர் பாக்யராஜ் மறைவு குறித்து சீமான் உருக்கம்..!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் அவர்களின் மறைவுக்குத்…

15 minutes ago

மதிமுக வெளியேறியதற்கு இதுதான் காரணமா..? திருமண விழாவில் ஸ்டாலின் – வைகோ இடையே நடந்தது என்ன..? பரபரப்பு பின்னணி..!!

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் அவசரப் பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ…

18 minutes ago

பரபரப்பு..! “எங்களை ஏன் கேவலமா பேசினீங்க..? ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை… வேதனையில் நொறுங்கிப்போன வைகோ… பரபரப்பு குற்றசாட்டு..!!

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியதற்கான அதிர்ச்சி பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.…

24 minutes ago

“ராஜினாமா செய்யுங்கள் நான் பாத்துக்குறேன்” வாக்குறுதி கொடுத்த விஜய்…? செம மகிழ்ச்சியில் வைகோ…!!

மதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகுமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் முதலமைச்சருமான விஜய் கேட்டுக்கொண்டதாக மதிமுக பொதுச்செயலாளர்…

32 minutes ago