“இனி 4 நாள் தான் வேலை… வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை”… இலங்கையை மொத்தமாக நிலைகுலைய வைக்கும் எரிபொருள் தட்டுப்பாடு….!

Spread the love

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றம் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்யும் புதிய நடைமுறையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதன்படி, அரசு நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் நுகர்வைக் குறைக்கவும், மின்சாரத்தைச் சேமிக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மார்ச் 18 முதல் நடைமுறைக்கு வரும் இந்தத் திட்டத்தின் மூலம், பொதுச் சேவைகளில் இடையூறு ஏற்படாமல் எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதைய நிலையில் சுகாதாரம், துறைமுகம், குடிநீர் விநியோகம் மற்றும் சுங்கத்துறை போன்ற அத்தியாவசிய சேவைகள் மட்டும் எவ்வித தடையுமின்றி வழக்கம் போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முடங்கியுள்ளதால், உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகத்திற்கு கியூ.ஆர் (QR) குறியீடு மூலம் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியைக் கையாள தனியார் நிறுவனங்களும் நான்கு நாள் வேலை முறையைப் பின்பற்றுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுடன் இலங்கை அரசு தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது இதே போன்ற எரிபொருள் தட்டுப்பாடு நிலவியதை நினைவுபடுத்தும் வகையில் தற்போதைய சூழல் அமைந்துள்ளதால், மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவுகிறது. இருப்பினும், மின்சாரம் மற்றும் போக்குவரத்துத் தேவைகளைச் சீராகப் பராமரிக்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம் என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Nanthini

Recent Posts

BREAKING: உலகத் தரம் வாய்ந்த ‘தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்’ உருவாக்கப்படும்… வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் விஜய்…!!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று விதி 110-ன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், தலைநகர் சென்னையில் உலகத் தரம்…

12 minutes ago

BREAKING: ரூ.1,200 கோடியில் பிரம்மாண்ட புதிய தலைமைச் செயலகம்… சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் மெகா அறிவிப்பு…!!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று விதி 110-ன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், மாநிலத்தில் புதிய சட்டமன்றம் மற்றும்…

19 minutes ago

“வேலை மட்டுமே வாழ்க்கை அல்ல…” பாலிவுட் பாடலுக்கு நடனமாடிய பெண் பேராசிரியர்… ஐஐடி மும்பையில் அரங்கேறிய அசத்தல் நிகழ்வு… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மும்பை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் வேதியியல் துறைத் தலைவராகப் பணியாற்றி வரும் பேராசிரியர் ருசி ஆனந்த், தனது துறையின் கலாச்சார…

31 minutes ago

“சௌமியா மேடம் கொஞ்சம் தர்மபுரியை விட்டு வெளியே வாங்க…” அமைச்சரின் கலகல பேச்சு… சட்டப்பேரவையில் எழுந்த அதிரடி சிரிப்பலை…!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, தர்மபுரி பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று சௌமியா அன்புமணி கோரிக்கை விடுத்தார்.…

38 minutes ago

“அன்பாக வளர்த்த செல்ல கழுதையை சுட்டுக்கொன்ற கொடூரம்…” அமெரிக்காவில் போலீசார் செய்த காரியம்.. நிதி திரட்டும் தளத்தில் ரூ.30 லட்சத்திற்கு மேல் குவிந்த உதவி… அதிர்ச்சி சம்பவம்..!!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள ராக்மார்ட் பகுதியில் ஹன்னா இஸ்ரேல் என்பவரது குடும்பத்தினர் 'ஹீ-ஹா' என்ற குட்டி ஆண் கழுதையைத்…

49 minutes ago