மீண்டும் மீண்டும் ஷாக்..! “மறைந்து போன மோதிரம், மாயமான விரல்” இது ‘நிஜ’ பிரதமரா..? அல்லது AI-யா..? உலகையே குழப்பத்தில் ஆழ்த்திய நெதன்யாகுவின் வீடியோ…!!

Spread the love

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோக்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, அவர் கையை அசைக்கும்போது விரலில் இருந்த மோதிரம் மறைவது போன்றும், மற்றொரு வீடியோவில் அவருக்கு ஆறு விரல்கள் இருப்பது போன்றும் தோன்றுவது, இந்த காட்சிகள் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகத்தை நெட்டிசன்களிடையே தூண்டியுள்ளது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் உச்சத்தில் இருக்கும் வேளையில், நெதன்யாகு இறந்துவிட்டதாகப் பரவிய வதந்திகளை எதிர்கொள்ளவே இந்த வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஜெருசலேமில் பொதுமக்களுடன் அவர் சாதாரணமாக உரையாடுவது போன்ற காட்சிகளை அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ள பிரதமர் அலுவலகம், அவர் நலமுடன் இருப்பதை உறுதிப்படுத்த முயல்கிறது. இருப்பினும், வீடியோவில் உள்ள தொழில்நுட்பக் குளறுபடிகள் (Glitches) காரணமாக இது ஒரு ‘டீப் ஃபேக்’ (Deepfake) வீடியோவாக இருக்கலாம் என்ற விமர்சனங்கள் வலுத்து வருகின்றன.

தன்னைப்பற்றிய வதந்திகளுக்கு நகைச்சுவையாகப் பதிலளித்துள்ள நெதன்யாகு, ஒரு ஹோட்டலில் காபி குடித்தபடி கேமராவிற்குத் தனது விரல்களை எண்ணிக் காட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். “நான் இறந்துவிட்டேன்… காபிக்காக” என்று கிண்டலாகக் குறிப்பிட்ட அவர், தொழில்நுட்ப ரீதியான சந்தேகங்களுக்குப் பதிலடி கொடுக்க முயன்றார். போர்க்கால சூழலில் தலைவர்களின் நம்பகத்தன்மை குறித்த இத்தகைய டிஜிட்டல் விவாதங்கள் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளன.

Soundarya

Recent Posts

ராகுல் காந்தி வந்தப்போ நடந்த அந்த ரெய்டு…. வீடியோ ஆதாரத்தால் சிக்கிய அதிகாரிகள்…? உண்மையை உடைத்த செல்வபெருந்தகை…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…

14 seconds ago

“எங்க வீட்டு மகாலட்சுமி வந்தாச்சு” முதன்முறையாக வீட்டுக்கு வந்த AC-க்கு பூஜை போட்டு.. வைரலாகும் நடுத்தரக் குடும்பத்தின் நெகிழ்ச்சியான கொண்டாட்டம்..!!

நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…

8 minutes ago

“சிஸ்டத்தையே அடித்து நொறுக்கு!”… பாஜகவில் ஐக்கியமான ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்… ராகவ் சதாவின் ‘யூ-டர்ன்’ அரசியலை கிழித்துத் தொங்கவிடும் நெட்டிசன்கள்…!!!

ஆம் ஆத்மி கட்சியின் (AAP) முக்கிய முகமாகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்த ராகவ் சதா, திடீரென அக்கட்சியிலிருந்து விலகி பாரதிய…

12 minutes ago

எறும்புகளின் இனப்படுகொலை..! ஆயிரக்கணக்கான எறும்புகளை உயிரோடு எரித்து வதைக்கும் கொடூரம்.. வைரல் வீடியோவால் அதிர்ச்சி..!!

ஆயிரக்கணக்கான எறும்புகளை உயிரோடு தீயிட்டு எரிக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஒரு நபர்…

19 minutes ago

பால் போன்ற உடலுக்குச் சொந்தக்காரர்… தமன்னா காலில் விழுவேன்… சர்ச்சைக்கு பாலிவுட் நடிகர் அன்னு கபூர் விளக்கம்..!!

பாலிவுட் நடிகர் அன்னு கபூர், நடிகை தமன்னாவின் உடல் தோற்றம் குறித்துப் பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. 'Aaj…

24 minutes ago

தேர்தல் முடிவுகளுக்கு பின்.. உதயநிதிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி… அதிர்ச்சியில் திமுகவினர்..!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வேட்பாளர்களின் சொத்து விவரங்களைச் சரிபார்க்கும் நடைமுறை தொடங்கப்படும் என்று வருமான வரித்துறை (IT) சென்னை உயர்…

28 minutes ago