பிரவுசிங் சென்டர் சென்ற மாணவி…செல்போனில் புதிய செயலி… அடுத்து நடந்த பயங்கர சம்பவம்… மொத்தத்தையும் பார்த்த வாலிபர்…!

Spread the love

மயிலாடுதுறை நீடூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் புதிய பாஸ்போர்டுக்கு விண்ணப்பிக்க மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் பிரவுசிங் சென்டருக்கு சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த பெரம்பூர் பகுதியை சேர்ந்த இதயத்துல்லா என்பவருடைய 28 வயது மகன் முகமது அப்ரீத் என்பவர் பாஸ்போர்ட் பதிவுக்கு அந்த மாணவியின் செல்போனில் “AirDroid Parental Control” என்ற ஆண்ட்ராய்டு செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று கூறி அந்த செயலியை மாணவியின் செல்போனில் நிறுவியுள்ளார். அந்த செயலியின் ஸ்கிரீன் மிரரிங் மற்றும் கேமரா ஆக்சன் போன்ற அம்சங்களை பயன்படுத்தி முகமது தன்னுடைய செல்போனிலிருந்து அந்த மனைவியின் செல்போன் கேமரா மற்றும் திரை மூலம் அவருடைய தனிப்பட்ட செயல்பாடுகளை மாணவிக்கு தெரியாமல் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார்.

சில நாட்களுக்குப் பிறகு மாணவியின் செல்போனில் வந்த சந்தேகத்திற்குரிய நோட்டிபிகேஷன் மற்றும் விரைவாக சார்ஜ் குறைவது போன்ற அறிகுறிகள் காரணமாக அந்த மாணவிக்கு சந்தேகம் வந்துள்ளது. உடனே பெற்றோரிடம் அவர் இது குறித்து தெரிவித்த நிலையில் உடனே பாதிக்கப்பட்ட மனைவியின் தாயார் போலீசில் புகார் அளித்தார். உடனே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கைது செய்யப்பட்ட முகமது தவறான செயலியை பயன்படுத்தி அந்த மாணவி மட்டுமல்லாமல் வேறு நான்கு நபர்களின் தனிப்பட்ட நடவடிக்கைகளையும் தன்னுடைய செல்போன் மூலம் சட்டவிரோதமாக கண்காணித்து வந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்துள்ள போலீசார் தற்போது சிறையில் அடைத்துள்ளன.

இந்த சம்பவம் தற்போது வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்கள் செல்போனில் தேவையில்லாத மற்றும் நம்பகத் தன்மையற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும். அப்படி செய்தால் தனிப்பட்ட தரவுகள் சைபர் குற்றவாளிகளால் திருடப்பட வாய்ப்புள்ளது. பொதுமக்கள் புதிய செயலிகளை பதிவிறக்கம் செய்யும்போதும் பிரவுசிங் செய்யும் போதும் அறிமுகம் இல்லாத நபர்களிடம் செல்போனை கொடுக்கும் போதும் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

Nanthini

Recent Posts

அரசு ஆசிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!.. இறுதியாக வந்தாச்சு நல்ல செய்தி.. தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு..!!

தமிழக அரசு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களையும் அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. தற்போது ஆசிரியர்கள் தரப்பில்…

3 minutes ago

“தமிழக அரசியலில் இதுவரை நடக்காத அதிசயம்”… ஒரே மேடையில் இணைந்த எடப்பாடி – அண்ணாமலை – சீமான் – விஜய் கட்சி.. பின்னணியில் அன்புமணி…!

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தலைமையில் சென்னையில்…

5 minutes ago

“சொன்ன வாக்குறுதி என்னாச்சு?”…. முதல்வர் விஜய் மீது உச்சகட்ட அப்செட்டில் சி.வி.சண்முகம் – விஜயபாஸ்கர்… கசிந்த அதிர்ச்சித் தகவல்….!

தமிழக அரசியலில் கட்சி தாவும் படலங்கள் நாளுக்கு நாள் அதிரடி திருப்பங்களை சந்தித்து வருகின்றன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிலிருந்து முன்னாள்…

10 minutes ago

பாஜக மட்டுமில்லை… அண்ணாமலையால் தவெக – திமுக – அதிமுக – நதக-க்கு விழும் பலத்த அடி… தமிழக அரசியலில் திடீர் பூகம்பம்…!

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து முற்றிலும் விலகி 'வீ தி லீடர்'…

16 minutes ago

அதிமுகவிற்கு அடுத்தடுத்த ஷாக்.. தவெகவில் இணைந்த உடுமலை ராதாகிருஷ்ணன்… தமிழக அரசியலில் புதிய திருப்பம்…!

தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் பரபரப்புகள் உச்சக்கட்டத்தை எட்டி வரும் நிலையில், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள்…

21 minutes ago

“வாயை அடக்கி பேசுங்க… வாய்ப்பு தேடி அலைந்த ஆதவ் அர்ஜுனா?”… கே.பி.முனுசாமி போட்ட “ரூட் மேப்” லிஸ்ட்… பனையூரில் நடந்த அதிரடி ட்விஸ்ட்….!

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல் மற்றும் அதிருப்தி காரணமாக, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மாற்று முகாமிற்கு நகரத் தொடங்கியுள்ளனர்.…

39 minutes ago