என்னது முதல் மரியாதை படத்தில் சிவாஜி கேரக்டரில் நடிக்க இருந்தது இந்த பிரபலம் தானா?.. பாரதிராஜா கேட்டும் நடிக்க மறுத்த அவர் யார் தெரியுமா..?

Spread the love

தமிழ் சினிமா திரையுலகில் 80 மற்றும் 90 கால கட்டங்களில் வெளிவந்த ஒரு சில படங்கள் உணர்வுபூர்வமாக மக்கள் மனதை விட்டு நீங்காமல் அப்படியே இருக்கின்றது. அந்த படங்களில் நடித்த சில நடிகர்கள் இன்னும் மக்கள் மனதில் நீங்காமல் அதே அந்தஸ்தை பெற்றுள்ளன. அப்படி மக்கள் மத்தியில் பிரபலமாகி இன்றுவரை நீங்காத இடம் பிடித்துள்ள திரைப்படங்களில் ஒன்றுதான் முதல் மரியாதை. இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் முதல் மரியாதை.

இந்த திரைப்படத்தை பாரதிராஜா அவர்கள் தயாரித்திருந்த நிலையில் படத்தில் சிவாஜி கணேசன், ராதா, சத்யராஜ் மற்றும் வடிவுக்கரசி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கிராமப்புற பின்னணியை மையமாகக் கொண்ட கதையாக அமைந்திருந்தது. இளையராஜாவின் இசையும் வைரமுத்து அவர்களின் பாடல் வரிகளும் மக்கள் மனதில் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைய செய்தது.

இந்தத் திரைப்படம் நடிகர் திலகத்தின் கடைசி வெற்றி விழா திரைப்படமாகவும் அமைந்திருந்தது. ஆனால் இந்த திரைப்படத்தில் முதன் முதலில் சிவாஜி கேரக்டரில் நடிக்க இருந்தது பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் தான். முதல் மரியாதை படத்தில் சிவாஜி நடித்த கதாபாத்திரத்தில் எஸ் பி பாலசுப்ரமணியம் நடிக்க வேண்டும் என்று பாரதிராஜா கேட்ட நிலையில் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

அதற்கு முக்கிய காரணம் இந்த திரைப்படம் உருவான காலகட்டத்தில் மிகவும் பிசியாக இருந்த எஸ் பி பி தினம்தோறும் 15 முதல் 20 பாடல்கள் வரை பாடிக் கொண்டிருந்தார். அந்த காரணத்தால் அப்போது படத்தில் நடிக்க முடியாது என கூறிவிட்டார். இந்த படத்தில் எஸ்பிபி நடிக்கவில்லை என்றாலும் படத்தில் இடம் பெற்ற பூங்காற்று திரும்புமா என்ற பாடலை அவர் தான் பாடியிருந்தார். ஆனால் அந்த பாடலும் படத்தில் இடம்பெறவில்லை. இறுதியாக மலேசியா வாசுதேவன் பாடியது தான் படத்தில் இடம் பெற்றிருந்தது.

Nanthini

Recent Posts

கடவுளே… கல்யாணமான சில வாரத்துல இப்படியா ஆகணும்?… அமெரிக்காவில் சோகமாக முடிந்த… இளைஞரின் வாழ்க்கை… நெஞ்சை பதபதக்க வைக்கும் சம்பவம்…!

அமெரிக்காவில் உயர்கல்வி முடித்து பணியாற்றி வந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் முகம்மத் ஜாபர் உசேன், மசாசூசெட்ஸ் மாகாணத்திலுள்ள…

4 minutes ago

அடப்பாவிங்களா… நடுரோட்டுல என்னடா கூத்து இது?… கார் சாகசம் செய்து அலப்பறை கூட்டிய வாலிபர்கள்… ஹைதராபாத்தில் ஷாக்கிங் சம்பவம்…!

ஹைதராபாத்தின் அத்தாப்பூர் பகுதியில் உள்ள சிந்தல்மெட் டி-மார்ட் கூட்ரோடு அருகே, இளைஞர்கள் சிலர் காரில் ஆபத்தான முறையில் சாகசங்களில் ஈடுபட்டு…

29 minutes ago

ஐயோ… கூரையையே தூக்குறானுங்க சார்… எஸ்டேட்டில் பகல் நேரத் துணிச்சல்… ஜெரார்ட் தகடுகளைக் கழற்றிய திருடன்… சிக்கியது எப்படி?… இணையத்தில் வைரல்…!

இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ… நீ வீட்டுக்கு வா… சேர்த்து வைக்கிறோம்… நீதிமன்றத்தில் கல்யாணம் செய்துவிட்டு… புதுப்பெண்ணைச் சிறைவைத்த பெற்றோர்… மாடியிலிருந்து குதித்து விபரீத முடிவு… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!

காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…

9 மணத்தியாலங்கள் ago