“5 மணி நேர ரகசிய ஆலோசனை”…. CV சண்முகம் வீட்டில் நடந்த ‘மகா சதி’…. இரவோடு இரவாக சென்னை பங்களாவில் ரகசிய கூட்டம்… அதிமுகவில் வெடிக்கப்போகும் அடுத்த அணுகுண்டு….!

Spread the love

அதிமுக உட்கட்சி அரசியலில் மீண்டும் புயல் வீசத் தொடங்கியுள்ள நிலையில், சென்னை பாலவாக்கத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் இல்லத்தில் நடைபெற்ற ரகசிய ஆலோசனை கூட்டம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று சட்டமன்றக் கூட்டம் நிறைவடைந்ததும், சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த நீண்ட ஆலோசனையில் எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கேபி அன்பழகன் மற்றும் சிவி சண்முகம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். கட்சியில் ஏற்பட்டுள்ள அதிருப்தி மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து இதில் தீவிரமாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

கட்சியில் தங்களுக்கு மீண்டும் பழைய முக்கியப் பொறுப்புகளை வழங்கக் கோரி, எஸ்பி வேலுமணி உள்ளிட்ட 9 மூத்த நிர்வாகிகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இருமுறை கடிதம் எழுதியிருந்தனர். இருப்பினும், கோரிக்கைகளை எடப்பாடி பழனிசாமி பொருட்படுத்தாததால், இவர்கள் தீவிர அதிருப்தியில் வலம் வருகின்றனர். சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் எடப்பாடியை பகிரங்கமாக விமர்சித்த போதிலும், உட்கட்சித் தர்மத்தை மீறி அவர்கள் மீது நீக்க நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் தலைமை அமைதி காத்து வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் பட்ஜெட் தாக்கலுக்குப் பின், எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் மற்றும் கேபி அன்பழகன் ஆகியோர் சட்டசபையில் அமைச்சர் ஆனந்த் மற்றும் செங்கோட்டையன் ஆகியோரைச் சந்தித்துப் பேசினர். அப்போது சட்டமன்றத்தில் தங்களை தனியாகக் கருத வேண்டும் என்று கோரியதாகக் கூறப்படும் வேளையில், தவெக உள்ளிட்ட மாற்று கட்சிகளின் பக்கம் நகர்வதிலும் சட்ட ரீதியான சிக்கல்கள் நீடிக்கின்றன. இதனிடையே, குதிரை பேரம் தொடர்பாக ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட கருத்துகள் இந்த அரசியல் சூட்டை மேலும் அதிகப்படுத்தியுள்ளன.

தற்போது நடைபெற்றுள்ள இந்த 5 மணி நேர நீண்ட ஆலோசனை கூட்டம், அதிருப்தி நிர்வாகிகளின் அடுத்தகட்ட வியூகத்தை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒரு “போட்டி அதிமுக” அணியை உருவாக்க எஸ்பி வேலுமணி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்த கூட்டத்தின் முடிவுகள் அதிமுகவின் தலைமைக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

“ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டுப் பலன்கள் இனி விரிவடையும்…” PF பிடித்தம் செய்வதற்கான சம்பள வரம்பு உயர்வு…. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி ஒப்புதல்…!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் பி.எப். தொகை…

6 minutes ago

“அமைச்சர்களுக்கு மேஜையில் விதவிதமான அசைவ உணவு…” தொண்டர்களுக்கு குப்பை தொட்டி அருகே உணவா…? தவெக 100-வது நாள் சாதனை விளக்க கூட்டத்தில் சர்ச்சை…!!

திருப்பத்தூரை அடுத்த ஆதியூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 100-வது நாள் சாதனை…

24 minutes ago

“அரசியலுக்கு வரக் கூடாது என்று சொல்லத்தான்…” இது புது கணக்கு.. முதல்வர் விஜயின் லண்டன் பயணம் …. திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி பேச்சு…!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.…

55 minutes ago

“என்னை விட்டுரு…” மாற்றுத்திறனாளி பெண்ணின் அலறல் சத்தம்… வேலைக்கு சென்ற இடத்தில் தர்ம அடி வாங்கிய தொழிலாளி….. பரபரப்பு சம்பவம்…!!

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் 57 வயதான சுனில். கட்டிடத் தொழிலாளியான இவர், தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகிலுள்ள சோட்டையன்தோப்பு…

1 மணத்தியாலம் ago

“கடவுளே இது என்ன கொடுமை…! கணவர் இறந்த துக்கத்தில் 7 மாத கர்ப்பிணி தற்கொலை… பரிதவிக்கும் 4 வயது குழந்தை… 8 ஆண்டு கால வாழ்க்கையில் பெரும் சோகம்…!!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்துள்ள கவசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் 34 வயதான சரத்குமார். இவர் ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள ஒரு…

1 மணத்தியாலம் ago

“டேட்டிங் செயலியில் வலை….”  ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரவழைத்த கும்பல்…. வாலிபரை கத்தியால் குத்தி கொடூரம்…. நடுங்க வைக்கும் பின்னணி…!!

விழுப்புரம் மாவட்டம் பம்பாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான பச்சைமுத்து. இவர் பிரபல டேட்டிங் செயலியைப் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில்,…

2 மணத்தியாலங்கள் ago