“லிப்ட்டில் கதறி அழுத 5 வயது பிஞ்சு குழந்தை…” வெளியே துடித்த பெற்றோர்…. 1 மணி நேரமாக வராத மீட்பு குழு…. பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

Spread the love

கிரேட்டர் நொய்டா வெஸ்ட் பகுதியில் அமைந்துள்ள ஹெரிடேஜ் ஹோம்ஸ் குடியிருப்பில், திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 5 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டு வேலைக்காரப் பெண்ணுடன் லிஃப்ட்டிற்குள் சிக்கிக் கொண்டார். மின்சாரம் இல்லாததால் லிஃப்ட் முற்றிலும் இருண்டு, கடுமையான வெப்பம் நிலவிய சூழலில், அச்சிறுமி பயத்தால் கதறி அழுதுள்ளார். ஆபத்துக்கான அவசர அலாரம் ஒலிக்கப்பட்ட போதிலும், நீண்ட நேரமாக மீட்பு உதவிகள் எதுவும் வராததால் குடியிருப்பு வளாகத்தில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.

வெளியே நின்று கொண்டிருந்த பெற்றோர், உள்ளே தங்கள் பிஞ்சு மகள் பயத்தில் அலறும் குரலைக் கேட்டு ஒன்றும் செய்ய முடியாமல் கதறித் துடித்தனர். சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, லிஃப்ட்டின் கதவுகள் பலவந்தமாக உடைக்கப்பட்டு சிறுமியும் வேலைக்காரப் பெண்ணும் பத்திரமாக வெளியே மீட்கப்பட்டனர். நீண்ட நேரப் போராட்டத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குடியிருப்பு நிர்வாகத்தின் இந்த அலட்சியப்போக்கு அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

“மாமியார் இறந்தால்தான் சந்தோஷமாக வாழ முடியும்…” கழிவறையில் வழுக்கி விழுந்ததாக நாடகம்…. 5 ஆண்டு கால பகையை தீர்த்த மருமகள்…. பகீர் பின்னணி…!!

செங்கல்பட்டு அடுத்த பெரியநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி இந்துஜா (28). திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில்,…

17 minutes ago

“லண்டன் பயணம் வெறும் இன்ப சுற்றுலா…” ஆட்சிக்கு வந்த கொஞ்ச நாளில் ரூ.40,000 கோடி கடன்… தவெக அரசை போட்டு தாக்கிய எடப்பாடி பழனிச்சாமி…!!

செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியை கடுமையாக விமரிசித்துப் பேசினார். அவர் பேசுகையில்,…

28 minutes ago

“நடுவானில் குலுங்கிய போயிங் விமானம்…” டயர் கழன்று மேற்கூரை விழுந்ததால் அலறிய பயணிகள்… சாமர்த்தியமாக செயல்பட்ட பைலட்… திக் திக் நிமிடங்கள்…!!

ஈரானின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள மஷ்ஹத் விமான நிலையத்திலிருந்து, செபெஹ்ரான் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம்…

35 minutes ago

“அவர் சின்னப்பிள்ளை… திமுகவில் சேர்ந்துவிடுகிறேன் என சொன்னவர்…” எம்.பி. பதவி திமுக போட்ட பிச்சையா…? கே.என் நேரு-துரை வைக்கோ இடையே காரசார வார்த்தை போர்…!!

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, முதல்வர் விஜய்யின் தவெகவுடன் மதிமுக கூட்டணி அமைத்துள்ள நிலையில், இரு கட்சித் தலைவர்களுக்கும் இடையே…

44 minutes ago