“நடுவானில் குலுங்கிய போயிங் விமானம்…” டயர் கழன்று மேற்கூரை விழுந்ததால் அலறிய பயணிகள்… சாமர்த்தியமாக செயல்பட்ட பைலட்… திக் திக் நிமிடங்கள்…!!

Spread the love

ஈரானின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள மஷ்ஹத் விமான நிலையத்திலிருந்து, செபெஹ்ரான் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம் கெர்மான்ஷா நகரை நோக்கிப் புறப்பட்டது. விமானம் டேக்-ஆஃப் ஆன சில நிமிடங்களிலேயே, சக்கரத்தில் இருந்த டயர் ஒன்று திடீரெனக் கழன்று விழுந்து கடும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் நடுவானில் பயங்கரமாகக் குலுங்கியதுடன், கேபின் பகுதியில் இருந்த லக்கேஜ்கள் கீழே விழுந்தன. மேலும் விமானத்தின் உள் மேற்கூரை திடீரெனப் பெயர்ந்து பயணிகள் மீது விழுந்ததால், அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறித் துடித்தனர்.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பைலட், உடனடியாக கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு விமானத்தைப் புறப்பட்ட மஷ்ஹத் விமான நிலையத்திலேயே அவசரமாகத் தரையிறக்கினார். பைலட்டின் சமயோசிதமான செயலால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுப் பெரும் விபத்து த தடுக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் சில பயணிகள் லேசான காயமடைந்த நிலையில், அவர்கள் மாற்று விமானம் மூலம் தங்களின் இலக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Devi Ramu

Recent Posts

“10 நிமிஷத்துல உள்ள விடலைனா கேட்டை உடைப்போம்…” மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் பெண் பக்தர்கள் கொந்தளிப்பு…!!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மிக விமரிசையாகக் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தவெக அரசின் மோசமான…

1 minute ago

“உள்ளே வராதீங்க… என்ன செஞ்சீங்க..?” மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு கடும் எதிர்ப்பு…! பிரச்சாரத்தில் திடீர் பரபரப்பு…!!

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல், வீராணக்குன்னம் கிராமப் பகுதியில் தீவிர வாக்கு…

11 minutes ago

“மாமியார் இறந்தால்தான் சந்தோஷமாக வாழ முடியும்…” கழிவறையில் வழுக்கி விழுந்ததாக நாடகம்…. 5 ஆண்டு கால பகையை தீர்த்த மருமகள்…. பகீர் பின்னணி…!!

செங்கல்பட்டு அடுத்த பெரியநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி இந்துஜா (28). திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில்,…

41 minutes ago