“லண்டன் பயணம் வெறும் இன்ப சுற்றுலா…” ஆட்சிக்கு வந்த கொஞ்ச நாளில் ரூ.40,000 கோடி கடன்… தவெக அரசை போட்டு தாக்கிய எடப்பாடி பழனிச்சாமி…!!

Spread the love

செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியை கடுமையாக விமரிசித்துப் பேசினார். அவர் பேசுகையில், “தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு லஞ்சம் கேட்டு வாங்கும் சூழல் உருவாகியுள்ளது. மின்வெட்டு இல்லை என்று சொல்லிக்கொண்டே வெளிச் சந்தையில் 2000 மெகாவாட் மின்சாரத்தை வாங்க அரசு முற்படுவது அவர்களின் அனுபவமின்மையையே காட்டுகிறது. மேலும், ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்தில் ரூ.40,000 கோடி கடன் வாங்கியுள்ளனர். இந்தச் சூழலில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த கடற்கரை மற்றும் பள்ளிப் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல” என்று சாடினார்.

தொடர்ந்து பேசிய அவர், “முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் ஒரு இன்பச் சுற்றுலா மட்டுமே. இங்கேயே கிளைகள் உள்ள நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய லண்டன் வரை செல்ல வேண்டிய அவசியமில்லை. மேலும், அதிமுக எம்.எல்.ஏ-க்களைக் குதிரை பேரம் மூலம் விலைக்கு வாங்கி மதுராந்தகம், தாராபுரத்தில் இடைத்தேர்தலைத் திணித்துள்ளனர். மக்களின் தீர்ப்பை மதிக்காத இந்த தவெக அரசுக்கு வரும் இடைத்தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என எடப்பாடி பழனிசாமி கொந்தளித்தார்.

Devi Ramu

Recent Posts

” அறங்காவலர்களை ஒதுக்கிவிட்டு அராஜகம்…” திருப்பணிகளை செய்தது திமுக அரசுதான்… மதுரை மீனாட்சியம்மன் கும்பாபிஷேகக் குளறுபடியில் கொந்தளித்த பிடிஆர்…!!!

வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான குளறுபடிகள், விஐபி கலாச்சாரம் மற்றும் பக்தர்கள்…

35 seconds ago

“10 நிமிஷத்துல உள்ள விடலைனா கேட்டை உடைப்போம்…” மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் பெண் பக்தர்கள் கொந்தளிப்பு…!!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மிக விமரிசையாகக் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தவெக அரசின் மோசமான…

19 minutes ago

“உள்ளே வராதீங்க… என்ன செஞ்சீங்க..?” மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு கடும் எதிர்ப்பு…! பிரச்சாரத்தில் திடீர் பரபரப்பு…!!

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல், வீராணக்குன்னம் கிராமப் பகுதியில் தீவிர வாக்கு…

28 minutes ago