டெல்லியின் மெஹ்ராம் நகர் பகுதியில் உள்ள சீப்ரா கிராசிங்கில் சாலையைக் கடக்க முயன்ற ஜெயவந்தி (48) என்ற வீட்டு வேலை செய்யும் பெண் மீது அதிவேகமாக வந்த பி.எம்.டபிள்யூ கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மதிய உணவிற்காக வீட்டிற்குத் திரும்பிய போது நிகழ்ந்த இந்த கொடூர விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த தீபக் (38) என்ற ஓட்டுநரைப் போலீசார் உடனடியாகக் கைது செய்தனர். விபத்தை ஏற்படுத்திய பின் காயமடைந்த பெண்ணைக் காப்பாற்றாமல் ஓட்டுநர் தப்பியோடியதே அவரது இறப்பிற்குக் காரணம் எனக் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 3 செல்லும் சாலையில் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் தொடர்ச்சியாக விபத்துகள் நடப்பதால் உடனடியாக வேகக் கட்டுப்பாடு அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் எனக் கூறிப் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அசம்பாவிதங்களைத் தடுக்கப் பொலிஸாரும் துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டை அருகே, குடும்பத் தகராறு காரணமாக மனைவியை குடும்பம் நடத்த அழைத்தபோது ஏற்பட்ட…
வடமேற்கு டெல்லியின் ஸ்வரூப் நகர் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு,…
பூமியிலிருந்து பார்க்கும்போது அமைதியாகக் காட்சியளிக்கும் நிலவில், கடந்த 2024-ஆம் ஆண்டு ஒரு மிகப்பெரிய விண்வெளி மோதல் நிகழ்ந்துள்ளது. 2024 ஏப்ரல்…
தமிழ்நாடு பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது, அக்கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் துன்புறுத்தல், ஏமாற்றுதல் மற்றும்…
மதுரையைச் சேர்ந்த தமிழக அமைச்சர்களான CTR நிர்மல் குமார், விஸ்வநாதன் இடையே உள்கட்சி பூசல் மற்றும் பனிப்போர் நிலவி வருவதாக…
\ தமிழ்நாட்டு அரசியலில் தற்போதைய கூட்டணி மாற்றங்களும், தலைவர்களின் பரஸ்பர விமர்சனங்களும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. இது குறித்து பிரபல…