Categories: சினிமா

ராமராஜன் டு ஜிவி பிரகாஷ் வரை.. காதல் திருமணம் செய்து விவாகரத்து பெற்ற பிரபலங்கள்.. இதுல தனுஷ் தான் ஹைலைட்டே..!

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது வரை விவாகரத்து பெற்ற பிரபலங்களைப் பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஜிவி பிரகாஷ் சைந்தவி:

இருவரும் நேற்று தங்களது பிரிவை அறிவித்திருந்தார்கள். 2013 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிகள் இசை துறையில் மிகப் பிரபலமாக இருந்த தம்பதிகள். திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிவு உள்ளதாக அறிவித்திருந்தன. இது தமிழ் சினிமாவில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகின்றது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்- தனுஷ்:

ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவும் பிரபல நடிகர் தனுஷிம் 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் 18 வருடங்களுக்குப் பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு தாங்கள் விவாகரத்து செய்து கொள்வதாக அறிவித்திருந்தனர்.

டி இமான்-மோனி ரிச்சர்ட்:

பிரபல இசையமைப்பாளரான டி இமான் கடந்த 2008 ஆம் ஆண்டு மோனி ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 13 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இந்த தம்பதிகள் கடந்து 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிறந்தனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இசையமைப்பாளர் டி இமான் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டார்.

இயக்குனர் பாலா-மலர்:

கோலிவுட்டில் முன்னணி இயக்குனராக வளம் வரும் பாலா, முத்துமலர் என்பவரை 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு பிரார்த்தனா என்கின்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இந்த தம்பதிகள் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

 

விஷ்ணு விஷால்- ரஜினி:

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் தயாரிப்பாளராக வளரும் விஷ்ணு விஷால். ரஜினி என்பவரை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு ஆரியன் என்கின்ற மகன் இருக்கின்றார். பின்னர் 2018 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பிரிந்துவிட்ட நிலையில் விஷ்ணு விஷால். வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

பார்த்திபன்-சீதா:

பிரபல இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் சீதா என்பவரை கடந்த 1990 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. பிறர் கருத்து வேறுபாடு காரணமாக 2001 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

 

நடிகை நளினி-ராமராஜன்:

1990களில் பிரபல நடிகராக வலம் வந்த ராமராஜன் நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக 13 வருடங்களுக்கு பிறகு 2000 ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்த தம்பதிகளுக்கு அருணா என்கின்ற மகளும் அருண் என்கின்ற மகளும் இருக்கிறார்கள். இப்படி தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட பிரபலங்கள் பல வருடங்கள் ஒன்றாக இருந்துவிட்டு பின்னர் மனக்கசப்பு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விடுகின்றனர்.

Mahalakshmi

Recent Posts

அட கடவுளே… 24 மணி நேரம் சேற்றில் போராட்டம்… நேபாள வெள்ளத்தில் அதிசயமாக மீட்கப்பட்ட இளம்பெண்… பெற்றோரை இழந்து தவிக்கும் சோகம்…!

நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கோர வெள்ளப்பெருக்கில், 25 வயது இளம்பெண் ஒருவர் பெருவெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு வெகுதூரம் கொண்டு செல்லப்பட்டார்.…

5 minutes ago

ஐயோ… போலீஸை ஓடவிட்டுவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பியோட்டம்… பாடகர் கொலை வழக்கில்… கோகி கும்பலின் பகீர் திட்டம்…!

கார்நாட் பகுதியில் உள்ள ஒரு மொபைல் கடையில் கோகி கும்பலைச் சேர்ந்த ஆர்யன் சித்து மற்றும் சத்யம் கடியான் என்ற…

6 minutes ago

“உடலில் நெளிந்த புழுக்கள்…” மரணப்பிடியில் சிக்கி தவித்த முதியவர்… கடவுளாக வந்து உயிரைக் காப்பாற்றிய வாலிபர்… கண்கலங்க வைக்கும் நெகிழ்ச்சி சம்பவம்..!!

டெல்லியின் பளபளப்பான ஆடம்பர நகர வாழ்க்கைக்கு நடுவே, முதியவர் ஒருவர் ஆதரவின்றிச் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். போதிய பராமரிப்பும் உணவும்…

18 minutes ago

“ஸ்டீயரிங்கை தொட்டுக் கும்பிட்டு கண்ணீர்…” பணி ஓய்வு நாளில் பஸ்சுக்கு முத்தம் கொடுத்து விடைபெற்ற டிரைவர்… கேரளாவில் நெகிழ வைக்கும் வீடியோ வைரல்…!!

கேரள மாநில அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் இடுக்கி மாவட்டம் குமளி டிப்போவில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தவர் பால் குரியன். இவர்…

26 minutes ago

கோடாரி, வாளுடன் வாலிபரை தாக்க பாய்ந்த கும்பல்… தடுக்க முயன்ற பெண்… இணையத்தில் வைரலாகும் பயங்கர வீடியோ…!!

சமூக வலைத்தளங்களில் கோடாரி மற்றும் வாள் போன்ற கூர்மையான ஆயுதங்களுடன் இளைஞர் ஒருவரைத் தாக்கப் பாயும் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ…

38 minutes ago