Categories: சினிமா

கோவில் கோவிலாக சுற்றி வரும் நயன்தாரா-விக்கி தம்பதி.. இப்ப எந்த ஊருக்கு போயிருக்காங்க தெரியுமா..?

Spread the love

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்துடன் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் தற்போது தனது கனவுகளுடன் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழில் இவர் கடைசியாக நடித்த திரைப்படம் அன்னபூரணி.  இந்த திரைப்படத்தை தொடர்ந்து மண்ணாங்கட்டி என்கின்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். அன்னபூரணி திரைப்படம் அந்த அளவுக்கு வரவேற்பை பெறாத காரணத்தினால் இவரது கெரியரில் சற்று சறுக்கல் விழுந்துள்ளது. இவர் பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் உள்ள மிகப்பெரிய ரெசார்ட்டில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்று முடிந்தது. திருமணமான 4 மாதங்களில் இரட்டை குழந்தைக்கு தாயானார் நடிகை நயன்தாரா. வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்ட இவர்கள் தற்போது குடும்பமாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தனது குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். ஒரு பக்கம் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் பிசினஸ், குழந்தைகள், குடும்பம் என்று அனைத்தையும் கவனமாக பார்த்து வருகின்றார்.

நடிகை நயன்தாரா கிறிஸ்டினாக இருந்தாலும் விக்னேஷ் அவனை காதலிக்க தொடங்கியதிலிருந்து கோயில் கோயிலாக சென்று வருகிறார். இது தொடர்பான புகைப்படங்களை கூட நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் தற்போது கன்னியாகுமரியில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்திருக்கிறார்கள் நயன்தாரா மற்றும் விக்கி தம்பதியினர். நேற்று மாலை நயன்தாரா சுசீந்திரம் தாணுமாலயசாமி சாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

அதைத் தொடர்ந்து நாகர்கோவிலில் இருக்கும் நாகராஜா கோயிலுக்கும் சென்றிருந்தனர் சாமிதோப்பில் உள்ள அய்யன் வைகுண்டசாமி கோவிலுக்கும் கன்னியாகுமரிகளுக்கும் பகவதி சாமி கோயிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்து வந்திருக்கிறார்கள். அங்கு நயன்தாரா ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. கடவுள் மீது அதிக பக்தி கொண்டவராக மாறி இருக்கும் நயன்தாரா தொடர்ந்து கோயில் கோயிலாக சென்று வருகின்றார்.

Mahalakshmi

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

7 minutes ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

11 minutes ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

16 minutes ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

22 minutes ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

22 minutes ago